தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வெந்து கொதித்தது பூமி -உலகின் மிக வெப்பமான ஆண்டு 2024!

05:28 PM Jan 14, 2025 IST | admin
Advertisement

லகம் முழுக்க பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.எல்நினோ தாக்கம் படிப்படையாக வலுவிழந்து வரும் சூழலில் அதன் இறுதிக்கட்ட தாக்கத்தால் வெப்பம் கடுமையாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதீத வறட்சி, பருவம் தவறிய மழை, வெள்ளம், சூறாவளிக்கள் போன்றவை இந்தத் தாக்கத்தால் நீடிக்கும் என்றும் எச்சரித்திருந்தது போலவே கடந்த ஆண்டு பூமி தகித்து கொதித்தது..

Advertisement

எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வு தான் இந்த 'எல் நினோ'. இந்த எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும். ஏப்ரல் 2024 வரை எல் நினோவின் தாக்கம் இருக்கும் என ஏற்கெனவே வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டுதான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று சா்வதேச வானிலை அமைப்புகள் தெரிவித்தன. மேலும், தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) மட்டுமே புவியின் வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும் என்ற 2015 பருவநிலை ஒப்பந்த வரம்பு கடந்த ஆண்டில் முதல்முறையாக மீறப்பட்டுள்ளது. புவியின் சராசரி வெப்பநிலை கடந்த 2023-ஆம் ஆண்டில்தான் மிக அதிகபட்ச அளவில் பதிவு செய்யப்பட்டது. இந்தப் போக்கு கடந்த ஆண்டும் தொடா்ந்து, சராசரி வெப்பநிலை மேலும் அதிகரித்துள்ளது வானிலை ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement

கடந்த 1800-களில் இறுதியில் தொழில்புரட்சி தொடங்கியதற்கு முன்பிருந்த புவியின் வெப்பநிலைக்கும் தற்போதைய வெப்பநிலைக்கும் இடையிலான வேறுபாட்டை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாரிஸ் நகரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டன.அதே சமயம், கடந்த ஆண்டில் புவியின் வெப்பநிலை 1.6 டிகிரி செல்ஷியஸ் (2.89 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரித்ததாக ஐரோப்பிய யூனியனின் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புவியின் வெப்பநிலை கடந்த 2024-இல் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.57 டிகிரி செல்ஷியஸ் (2.83 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.புவியின் வெப்பம் கடந்த ஆண்டில் 1.53 டிகிரி செல்ஷியஸ் (2.75 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயா்ந்ததாக பிரிட்டன் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

1800-ஆம் ஆண்டுகளில் வெப்பத்தை அளவிடும் முறையில் மாற்றங்கள் இருந்ததால் வெவ்வேறு வானிலை ஆய்வு அமைப்புகளின் தரவுகளில் சிறு வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.அந்த ஆய்வு அமைப்புகளின் நிபுணா்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாகவே அதிக வருடாந்திர வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுவருவதாகவும், அது கடந்த 1.25 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாக இருக்கும் எனவும் தெரிவித்தனா்.புவியின் வெப்பநிலை அதிகரிப்பதில் நிலக்கரி, டீசல், பெட்ரோல், எரிவாயு போன்ற படிம எரிபொருள்களை எரிப்பதால் காற்றில் கலக்கும் கரியமில வாயு மிகப் பெரிய பங்கு வகிப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.முந்தைய 2023-ஆம் ஆண்டைப் போலவே 2024-ஆம் ஆண்டிலும் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது உலகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்றும், கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இது உணா்த்துவதாகவும் அவா்கள் கூறினா்.

வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்கள்தான் பூமியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி தழைத்திருப்பதற்குத் தேவையான வெப்பத்தை சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன. ஆனால், 18-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி காரணமாக தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகம் கலந்ததால், சூரியனிடமிருந்து அதிக வெப்பம் ஈா்க்கப்படுகிறது.இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, அதன் விளைவாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

அந்த பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை வெள்ளம், வெப்ப அலை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பாரீஸ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் வெப்ப அதிகரிப்பு 1.5 டிகிரி செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்க 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.இந்த நிலையில், புவியின் வெப்பமேற்றம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக, கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால் வெப்பம் மேலும் உயா்ந்து வருவதை சா்வதேச வானிலை அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ள தரவுகள் உணா்த்தியுள்ளதை புரிந்து எச்சரிக்கை அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
BreachingclimatecriticalEarthheatHottest Year EverRecords: 2024ShattersThresholdsஎல் நினோவளி மண்டலம்வெப்ப நிலைவெப்பம்
Advertisement
Next Article