For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு!

07:58 PM Jan 08, 2025 IST | admin
ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு
Advertisement

த்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி நாட்டின் கருவூலம் என்றும் அழைக்கப்படுகிறது. 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, வங்கிகளின் வங்கியாக செயல்படுகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த வங்கிக்கு சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன.ரிசர்வ் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். தற்போது இந்த வங்கியில் "டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

Advertisement

பணி விபரம்:

Advertisement

சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் துறைகளில் ஜூனியர் இன்ஜினியர் பணி.

மொத்த காலி பணியிடங்கள்:

சிவில் பிரிவில் 7 (தென் மண்டலத்தில் இரண்டு காலிப்பணியிடங்கள்); எலெக்ட்ரிக்கல் பிரிவில் 4 (தென் மண்டலத்தில் ஒரு காலிப்பணியிடம்).

குறிப்பு: தென் மண்டலம் என்றால் சென்னை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம்.

வயது வரம்பு:

20 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்:

ஆரம்ப சம்பளம்:

ரூ.33,900.

கல்வித் தகுதி:

சிவில் பிரிவு: சிவில் இன்ஜினியரிங்கில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு அல்லது இன்ஜினியரிங் பட்டப்படிப்பு.

எலெக்ட்ரிக்கல் பிரிவு: எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு அல்லது இன்ஜினியரிங் பட்டப்படிப்பு.

அனுபவம்:

டிப்ளமோ படித்தவர்களுக்குக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். பட்டப்படிப்பு படித்தவர்களுக்குக் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

ஆன்லைன் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வு (எந்த மாநில வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலத்தில் புலமை வேண்டும்).

தேர்வு எங்கு நடக்கும்?

தமிழ்நாட்டில் சென்னை.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி:

ஜனவரி 20, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்:

www.opportunities.rbi.org.in

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆந்தை ரிப்போர்ட்டர் வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்க் -கை க்ளிக் செய்யவும்

Tags :
Advertisement