For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம்!

08:32 PM Jan 25, 2025 IST | admin
அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம்
Advertisement

மெரிக்கா ஆண்டுதோறும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அதிக நிதி உதவி அளிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. இதற்காக அந்த நாடு தனது பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது. கடந்த 2023-ல் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.5.17 லட்சம் கோடி) அல்லது அந்நாட்டின் பட்ஜெட்டில் சுமார் 1% ஒதுக்கப்பட்டது.சுகாதாரம், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நிதியுதவியை விரைவாக நிறுத்த உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.

Advertisement

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபோதே இனி அமெரிக்க ராணுவம் பிற நாடுகளுக்கு உதவி செய்யாது. நாட்டை பாதுகாக்கும் பணியில் மட்டுமே ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறினார். அதோடு நாட்டை மீண்டும் பணக்கார நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூளுரைத்தார்.அதன்படி அவர் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவுப்படி அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்த உத்தரவின்படி அமெரிக்கா மூலம் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதி என்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவுக்கு கடந்த 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிலையில் நேற்று முதல் அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.அதேநேரத்தில், இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான அவசர உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், உக்ரைனுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் இல்லை. மேலும், சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மக்களுக்கு உணவளிக்க முடியும்.அதேசமயம் மருத்துவமனைகள் மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்கள் போன்ற உயிர்காக்கும் சுகாதாரத் திட்டங்களுக்கு விலக்கு அளிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement