பிளாட்ஃபார்ம் கட்டணம் என்னும் கொள்ளையை அதிகரித்த ஆன்லைன் ஆப்ஸ்!
வீடு தேடி வந்து உணவளிக்கும் நிறுவனங்களான சோமோட்டோ & ஸ்விக்கி ஆகியவை தன்னிச்சையாக பிடுங்கும் பிளாட்ஃபார்ம் ஃபீ என்ற பெயரில் வாங்கும் கொள்ளைக் கட்டணத்தை தீபாவளையையொட்டி 60% உயர்த்தி விட்டது.
சோமேட்டோ நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பிளாட்பார்ம் கட்டணம் என்ற ஒரு புதிய கட்டணத்தை அறிமுகம் செய்தது. அப்போதிலிருந்து தற்போது வரை படிப்படியாக பிளாட்பார்ம் கட்டணத்தை சோமேட்டோ உயர்த்தி வருகிறது. தற்போது அதனை 10 ரூபாய் என அதிகரித்துவிட்டது.
சோமேட்டோ நிறுவனம் 2023இல் பிளாட்பார்ம் கட்டணத்தை அதிகரித்து அறிவித்ததில் இருந்து அதன் போட்டி நிறுவனமான ஸிவிக்கியும் பிளாட்பார்ம் கட்டணத்தை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை ரூ 6 மற்றும் ரூ 6/50 வாங்கி வந்த ஆப்கள் இப்போது அதை ரூ 10 என அறிவித்து உள்ளது.
நம் நாட்டில் ல் ஒரு நாளைக்கு சுமார் 27 லட்சம் முதல் 305 லட்சம் உணவு ஆர்டர்கள் இதுபோன்ற செயலிகள் வாயிலாக பெறப்படுகின்றனவாம்.
அப்படி இருக்கும் போது இதுபோல பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இந்த நிறுவனங்களின் வருவாய் கணிசமான அளவு அதிகரிக்கிறது. அதுவும் தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் சைலண்டாக போடும் கணக்கு வழிப்பறி கொள்ளையனுக்கு இணையானது என்ற கமெண்டுகள் பறக்க ஆரம்பித்து விட்டது