For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் பலி - விசாரணை நடத்த உத்தரவு!

06:09 PM Apr 25, 2024 IST | admin
சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் பலி   விசாரணை நடத்த உத்தரவு
Advertisement

ர்வதேச அளவில் உடல் பருமன் முக்கியப் பிரச்சினையாக இருந்துவருகிறது. முறையற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையின் விளைவாக உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஓர் எல்லையைத் தாண்டிவிட்டால் எதுவுமே பிரச்சினைதான். அபரிமிதமான உடல்பருமன் மரணத்தை ஏற்படுத்தவும் கூடும். அதீத உடல் பருமன் கொண்டவர்களுக்கு நவீன அறிவியல் வழங்கியிருக்கும் கொடை என பாரியாட்ரிக் அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். உடல் எடையைக் குறைக்கும் இந்த அறுவைசிகிச்சை மரணத்தை விளைவிக்கும் என்ற கண்ணோட்டமும் உள்ள நிலையில் உடல் பருமனைக் குறைக்க செய்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் சென்னை போலீஸில் புகார் அளித்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதிக எடை கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் நமது இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக உடல் பருமனை கொண்டிருக்கும் நாடு இந்தியா என்கிறார்கள். அதே நேரம் பலரும் இயற்கை முறையில் உடல் எடை குறைப்பில் கடுமையாக முயற்சிக்கும் போது அரிதாக சிலர் அறுவை சிகிச்சையின் மூலம் எளிதாக உடல் எடை குறைக்க முயற்சிக்கிறார்கள். வெகு அரிதாக அதிகமான உடல் எடையை கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவர்களே இந்த அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள். அதே நேரம் இது எல்லோருக்கும் சாத்தியமானதும் கிடையாது. இந்நிலையில் புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன் , ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணியில் இருந்துள்ளார். 26 வயதான ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

Advertisement

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் எதிர்பாராத விதமாக ஹேமச்சந்திரன் உயிரிழந்துள்ளார். ஹேமச்சந்திரன் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் இது தொடர்பாக சென்னை பம்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் உடல் பருமன் சிகிச்சையின்போது உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை மருத்துவத்துறை அமைத்தது.

Tags :
Advertisement