தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: வெயில் அதிகரிப்பதால் ஓஆர்எஸ்எல் பவுடர் வழங்க ஏற்பாடு!

08:40 AM Apr 29, 2024 IST | admin
Advertisement

டுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. அத்துடன் மே 2ம் தேதி வரை வெயில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை மற்றும் வெப்ப நிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் 108 டிகிரி வெயில் கொளுத்தி வருவதுடன், வெப்பநிலை அதை விட அதிமாக உணரப்படுகிறது. அதாவது 110 டிகிரி வெயில் இருந்தால் எப்படி வெப்பம் தகிக்குமோ அந்த அளவுக்கு வெப்ப நிலை உள்ளது. பகலில் பொதுமக்கள் வெளியில் வர முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமை காட்டி வருகிறது. வயதானவர்கள், குழந்தைகள் வெளியில் வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுரைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு ஓஆர்எஸ்எல் பவுடர் வழங்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவரை மற்றும காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

Advertisement

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39 செல்சியஸ் இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்.அதனால் இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஜார்கண்ட் மாநிலங்களில் 28ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் மே 2ம் தேதி வரை தமிழ்நாட்டிலும் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு லேசான மழை பெய்தாலும், வடதமிழகத்தில் பெரும்பாலும் வெயில் வாட்டி வதைக்கிறது.

* ஈரோட்டில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, கோவை, நாமக்கல், திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.

* ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

* பீகார், ஜார்க்கண்ட், அசாம் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

* ஊட்டியில் நேற்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியல் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5.4 டிகிரி செல்சியஸ் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Due to increasing heatHeat wavesupply ORSL powder!Tamil NaduYellow alert
Advertisement
Next Article