தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத் தொடங்கியுள்ளது!

07:02 PM Nov 25, 2023 IST | admin
Advertisement

ம் இந்திய தலைநகர் டெல்லியை போல் 2 மடங்கு பெரியதும், 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அங்கிருந்து நகரத் தொடங்கியுள்ளது பலவித குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது..

Advertisement

அண்டார்டிகாவின் வேடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய ‘ஏ23ஏ’ பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது. அண்டார்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986-ஆம் ஆண்டு உடைந்து நகரத் தொடங்கிய ஏ23ஏ பனிக்கட்டி, சிறிது காலத்திலேயே வேடல் கடல் பகுதியில் தரைதட்டி நின்றது. அதன் பிறகு அந்தப் பனிக் கட்டி மிகப் பெரிய பனித் தீவாக திகழ்ந்து வந்தது. சுமார் 4,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அந்தப் பனிக்கட்டி, உலகிலேயே மிகப் பெரியது ஆகும். டெல்லியைப் போல் இரண்டரை மடங்குக்கும் மேல் பெரிய இந்தப் பனிக்கட்டி, 400 மீட்டர் உயரம் கொண்டது.

Advertisement

ஒரு காலத்தில் சோவியத் யூனியன் இந்த பனிப்பாறையில் தான் ஆராய்ச்சி நிலையத்தை நடத்தியது. இந்த பனிப்பாறை கடந்த 37 வருடங்களாக வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கி அங்கேயே மிதக்க முடியாமல், நகர முடியாமல் இருந்தது. இனி அப்படியே நிற்காது.. ஏனெனில் அந்த பாறைப்பாறை தற்போது நகரத் தொடங்கி உள்ளது. சுமார் ஒரு டிரில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள இந்த பாறையானது, பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களின் உதவியால், அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையை கடந்து வேகமாக நகர்ந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களும் பனிப்பாறை நகர்வதை உறுதி செய்துள்ளன என்றார்கள்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் பனிக்கட்டி நகரத் தொடங்கியதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பனிக்கட்டி நகருவதையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தெற்கு ஜார்ஜியா பகுதிக்கு அருகே அந்தப் பனிக்கட்டி தரைதட்டினால் அங்குள்ள கடல்வாழ் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த ராட்சத பாறை சற்று ஆவியாகி உள்ளததால், எடை குறைந்து காற்று மற்றும் கடல் நீரோட்டம் குறைந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி நகர்கிறது. A23a பாறை தெற்கு ஜார்ஜியா தீவினை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த தீவினை இந்த பனிப்பாறை சென்றால்,, அண்டார்டிகாவின் வனவிலங்குகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பல்லாயிரம் உயிரினங்கள், பென்குயின்கள் மற்றும் கடற்பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்.. இருந்தாலும், இந்தப் பனிக்கட்டி உருகுவதால் அதிலுள்ள கனிமப் பொருள்கள் வெளிவந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
Antarctic iceberg A23amore than three decadesmove for the first timeScientistsThe world's largest icebergthree times the size of New York City.
Advertisement
Next Article