For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக குடை தினமின்று!

07:13 AM Feb 10, 2024 IST | admin
உலக குடை தினமின்று
Advertisement

வ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

குடை, நம்மை சூரியனின் கதிர்வீச்சு, மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமின்றி, இந்த நாளில், நாம் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

பழங்காலத்தில் சூரியனின் நிழல் மனிதர்களின் மேல் விழாமல் தடுக்கவே குடை பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடை கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்திய நாடுகளில் இவை பாரசோல் என்ற பெயரில் 3500 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டு வந்ததாம். பாரசோல் என்பது வெயிலில் உபயோகப்படுத்தப்பட்ட குடை. அந்தக் காலத்தில் எகிப்திய பிரபுக்கள், அரச பரம்பரை மற்றும் மதகுருக்களின் பிரத்தியேக உபயோகப் பொருளாக , ஒரு மரியாதைக்கு உரியவருக்கான பொருளாகவே குடை பார்க்கப்பட்டது. குடைகள் வைத்திருப்போருக்கு தனி மரியாதையும், குடைபிடிப்பவர்கள் என்று தனியே நியமிக்கப்பட்டதும் உண்டு. வெயிலிலிருந்து காப்பதற்காக அமைக்கப்பட்ட பாரசோல்கள், கொஞ்சம் கொஞ்சமாக மழைக்கான சேவைப் பொருளாக சீனர்களால் பதினோராம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது. இதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, ஒருவரின் பண நிலையைக்காட்டும் விதமாகக் குடைகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டன. சீன அரசரின் குடையில் நான்கு அடுக்குகள் அமைக்கப்பட்டன. அரசாங்கத்தில் உள்ளவரின் நிலைக்கு ஏற்ப இந்த அடுக்குகள் குறைக்கப்பட்டன.

Advertisement

எகிப்து, கிரேக்கம், சீனா போன்ற நாடுகளில் பழங்காலத்திலிருந்தே குடை இருந்ததற்கான ஆதாரம் இருக்கின்றன.வெண்கொற்றைக்குடையின் கீழ் ஆட்சி நடத்திய பண்டைய தமிழர்கள் என்ற வரிகளை படித்திருப்போம். முற்கால பல்லவ, சோழ, சிற்ப படைப்புகளில் நிச்சயமாக குடை வடிவம் இருக்கும். அதை வைத்தே அதன் காலத்தை அறிந்து கொள்ள முடியும். தமிழர்களும், சீனர்களும் பண்டைய காலத்திலேயே குடையை பயன்படுத்தியிருப்பதை பறைசாற்றுகின்றன வரலாற்று தரவுகள்.

பின்னாளில் மழையிலிருந்து பாதுகாக்க தண்ணீர் புகாத குடையை முதன் முதலில் சீனர்கள் தான் கண்டறிந்தனர். தண்ணீர் சிதறி ஓட வேண்டும் என்பதற்காக மெழுகு பூசப்பட்டது. அம்பர்லா என்ற வார்த்தை லத்தீன் மொழி சொல்லான "umbra"-- லிருந்துதான் வந்தது. இந்தச் சொல்லுக்கு நிழல் (Shade or Shadow) என்று அர்த்தம்.

16 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் குடை பிரபலமானது. குறிப்பாக வடக்கு ஐரோப்பாவில் மழைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் குடை பெண்களுக்கு ஏற்ற ஒரு சாதனமாகவே கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பெரிஷிய நாட்டு சுற்றுலாப் பயணி மற்றும் எழுத்தாளர் ஜோனாஸ் ஹன்வே [Jonas Hanway) என்பவர் குடையை ஆண்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார். ஆங்கிலயர்கள் தங்களின் குடையை ஹன்வே என்று குறிப்பிட்டனர்.

உலகின் முதல் குடை கடை ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் லண்டனில் 1830 ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போதும் இந்தக் கடை 53, நியூ ஆக்ஸ்ஃபோர்ட் தெரு என்ற முகவரியில் லண்டனில் இயங்கி வருகிறது.

ஐரோப்பாவில் ஆரம்ப காலத்தில் மரம் அல்லது திமிங்கலத்தில் எலும்பால் தயாரிக்கப்பட்டு ஆயில் கேன்வாஸால் மூடப்பட்டிருந்தது. மேலும், குடை கம்பியில் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்கு ஏற்ப விலை இருந்தது. 1852 ஆம் ஆண்டில் ல் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் இரும்பு கம்பிகளை கொண்ட குடையை வடிவமைத்தார். மேலும். இவர் இங்கிலீஷ் ஸ்டீல்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இன்றைக்கு குடை விதவிதமான வடிமைப்பில் பல்வேறு பொருட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இருட்டில் ஒளிரும் ரேடியம் குடை கூட விற்பனைக்கு கிடைக்கிறது இத்தினத்தில் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் அழகிய கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.

இப்படி பல்வேறு வகையான வரலாறுகள் கொண்ட குடையின் சிறப்புகளை நினைவு கூறும்ம் போது, மழையில் நாம் மறந்து வைத்து விட்டு வந்த குடைகள் நியாபகத்திற்கு வரும் என்பது நிதர்சனமான உண்மை. சரி, மிகப்பழமையான குடை என்னவாக இருக்கும் என்று யோசித்தால், கிருஷ்ணர் கோவர்த்தன மலையையே குடையாக தூக்கி, மழையிலிருந்து மக்களை காத்தார் அல்லவா, அதுவே முதல் குடையாக இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது இல்லையா?

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement