தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக தைராய்டு தினம்!

02:02 PM May 25, 2024 IST | admin
Advertisement

ர்வதேச அளவில் 22 கோடி பேர் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பு. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதி மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிறை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை, இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இப்பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

தைராய்டு குறைவாக அல்லது அதிகமாக சுரப்பதுதான் இதயம், எலும்பு, வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு என இவை அனைத்து தொடர்பு வியாதிகளுக்கும் மூலகாரணம். தைராய்டு கோளாறு அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னையாக இருந்து வருகிறது. இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு, தசை பலவீனம், மாதவிலக்கு மாற்றங்கள், சோர்வு, சரும வறட்சி போன்றவை ஏற்படலாம்.

Advertisement

தைராய்டு சுரப்பு பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாமை, அதிக மன அழுத்தம், ஜங்புட் எனும் துரித உணவுப் பொருட்கள். தினமும் அதிக நேரம் உழைப்பவர்களுக்கு ஹைபர் தைராய்டிசம் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் தென் கொரியாவின் நேஷனல் கேன்சர் சென்டர் ஆய்வாளர்கள். இதன் அறிகுறிகள் களைப்பு, மன அழுத்தம், அதிக குளிர் உணர்வு, உடல் எடை கூடுதல் போன்றவை. மற்றவர்களை விட வாரத்தில் கூடுதலாக 10 மணி நேரம் உழைப்பவர்களுக்குத்தான் இந்த ரிஸ்க் என்கிறார்கள்.

விரிவாகச் சொல்வதானால் நமது உடலில் பிட்யூட்டரி கிளாண்ட், அட்ரீனல் கிளாண்ட், கயைணம் என பல எண்டோகிரைன் கிளாண்ட்கள் (Endocrine gland) இருக்கின்றன. அவற்றில் தைராய்டு கிளாண்டும் ஒன்று. இது நமது கழுத்துப்பகுதியில் சுவாசக் குழாய்க்கு மேலேயும், பேச்சுக்குழாய்க்கு கீழேயும் இருக்கும். இது ரைட் லோப், லெஃப்ட் லோப், இஸ்துமஸ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. தைராய்டு கிளாண்டின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உணவு செரிமானம், இதய செயல்பாடு என மனித உடல் இயக்கத்திற்கு அடிப்படை இந்த தைராக்சின் ஹார்மோன்.

தைராய்டு தொடர்பான பாதிப்புகள் ஆண்களைவிட, பெண்களுக்கே அதிக அளவு ஏற்படுகிறது. தைராய்டு கிளாண்டில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படலாம். முதலாவது, அதன் செயல்திறனில் ஏற்படும் பாதிப்பு. செயல்திறன் பாதிக்கப்பட்டால் ஹார்மோன் சுரப்பு குறையலாம், அல்லது அதிகரிக்கலாம். ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் அதனை ஹைப்போதைராய்டிசம் என்றும், அதிகமான ஹார்மோன் சுரந்தால் அதை ஹைப்பர்தைராய்டிசம் என்றும் கூறுவார்கள். செயல்திறன் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

பெரும்பாலானோருக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அயோடின் குறைபாடு. தைராக்சின் உற்பத்திக்கு அயோடின் சத்து அத்தியாவசியம். இந்தக் குறைபாட்டை போக்கவே அயோடின் கலந்த உப்பை எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே கருத்தரித்த பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடற்சோர்வு, முகம், கை,கால்கள் வீக்கம், மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் ஏற்படுவது ஆகியவற்றை இந்த ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் எனலாம்.

தைராய்டு பிரச்னைக்கு காரணம் அயோடின் சத்து குறைபாடுதான். சைவ உணவு சாப்பிடுபவர்களில் 63 சதவீதம் பெண்களுக்கும், 36 சதவீதம் ஆண்களுக்கும் அயோடின் குறைபாடு இருப்பதாக பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் மெடிசின் என்ற சர்வதேச மருத்துவ இதழ் ஆய்வு தெரிவிக்கிறது.தைராய்டை சரி செய்யும் சத்து அயோடின் மற்றும் செலினியம் சத்துதான். இது அதிகமுள்ள உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்ள தைராய்டு பிரச்னைகளை தவிர்க்கலாம். அந்த வகையில் தைராய்டு கோளாறு ஏற்படுவதை தவிர்க்க உதவும் உணவு வகைகள் எவை என்பதை பார்க்கலாம்.

தைராய்டை தவிர்க்க சீரான அயோடின் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் வெள்ளரிக்காய் ஜூஸ், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கும் செலரி ஜூஸ், மஞ்சள் மற்றும் மிளகு கலந்த ஜூஸ், தைராய்டு சுரப்பு அதிகரிக்கும் எலுமிச்சை ஜூஸ்.

ஹார்மோன் சீராக சுரக்கவும, தைராய்டு இயக்கத்தை சீராக்கவும் செய்யும் ஆற்றல் உடையது தேங்காய், தேங்காய் எண்ணெய். தேங்காய் பூ தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். தினமும் காலையில் தேங்காய் பூ சாப்பிட்டுவந்தால், தைராய்டு சுரப்பு குறைபாட்டை முற்றிலும் குணமாக்கும். உடலுக்கு தேவையான மினரல்ஸ் தேங்காய் பூவில் உள்ளதால் ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

பெர்ரி பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி போன்றவை சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருக்கின்றன. பயோமெடிசின் மற்றும் பார்மகோதெரபி சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தைராய்டு செயலிழப்பை நிர்வகிக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள்களில் நார்ச்சத்து மற்றும் குவெர்செடின் போன்ற முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கவும் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. அதிலும் , ஆப்பிள்கள் உங்கள் உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவும் வைட்டமின் டி இயற்கையாகவே உள்ள சில உணவு வகைகளில் முட்டையும் ஒன்றாக உள்ளது. முட்டையில் ஐயோடின் மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. இவை இரண்டும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி மற்றும் சமநிலைக்கு அவசியமானதாக இருக்கிறது.

தயிர் அயோடின் பெறுவதற்கான சிறந்த மூலமாக உள்ளது. இது தைராய்டு செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். இதில் நிறைந்திருக்கும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது.

டாக்டர் செந்தில் வசந்த்

Tags :
awarenessdiseasesendocrine communitythyroidthyroid dysfunction.thyroid glandWorld Thyroid DayWTD
Advertisement
Next Article