For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கதை சொல்லல் தினமின்று!

07:27 AM Mar 20, 2024 IST | admin
கதை சொல்லல் தினமின்று
Advertisement

ப்படி ஓர் நாள் யாரால்? ஏன் கொண்டாடப்பட ஆரம்பித்தது, அதிலும் இந்த மார்ச் 20ல்  என்பது  போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் முன்னால் ஓஷோ-வின் ஒரு தகவல் முன்னதாக:

Advertisement

♻நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான ஜென் ஞானிகளில் ஒருவர். அவரைப் பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று நான் உங்களுக்கு பல முறை கூறியிருக்கிறேன். நான் அதை திரும்பக் கூறுகிறேன். ஏனெனில் இது போன்ற கதைகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் நீங்கள் அதை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும். அவை உங்களை வளப்படுத்தும். ஒவ்வொரு நாளும் நீங்கள் ஊட்டம் பெற வேண்டும். நேற்று காலை நான் உணவு சாப்பிட்டு விட்டேன், அதனால் இப்போது எனக்கு உணவு வேண்டாம் என்று நீங்கள் கூறுவதில்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும். நேற்று நான் சாப்பிட்டுவிட்டேன். இப்போது ஏன் சாப்பிடவேண்டும் என்று கேட்பதில்லை.

Advertisement

இந்த வித கதைகள் – இவை உங்களை வளப்படுத்தும் கதைகள். இந்தியாவில் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தை உண்டு. அதை மொழிமாற்றம் செய்ய முடியாது, ஆங்கிலத்தில் “படிப்பது” என்ற ஒரு வார்த்தை உண்டு. இந்தியாவில் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. ஒன்று படிப்பது, மற்றொன்று படித்ததையே திரும்ப திரும்ப படிப்பது. அதன் ஒரு பாகமாகி விடுவது. ஒவ்வொரு நாளும் காலையில் நீ கீதையை படிக்கிறாய். அது படிப்பது அல்ல. ஏனெனில் நீ அதை பலமுறை படித்திருக்கிறாய்.இப்போது அது ஒருவிதமான வளப்படுத்துதல். நீ அதை படிக்கவில்லை. நீ அதை ஒவ்வொரு நாளும் உண்கிறாய்.

அது ஒரு சிறந்த அனுபவமாகும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நீ வெவ்வேறு விதமான மனநிலையில் வருவதால் பல்வேறு விதமான அர்த்தங்கள் புரிகின்றன. அதே புத்தகம், அதே வார்த்தைகள் ஆனால் ஒவ்வொரு நாளும் புது ஆழத்தை நீ உணர்கிறாய். ஒவ்வொரு நாளும் புதிதான ஏதோ ஒன்றை படிப்பது போன்று நீ உணர்கிறாய். ஏனெனில் கீதை அல்லது அது போன்ற புத்தகங்களில் ஆழமான உண்மை உண்டு. அவற்றை ஒருமுறை படித்தால் மேலோட்டமாக இருக்கும், இரண்டாவது, மூன்றாவது தடவை படிக்க படிக்க ஆழ்ந்து செல்வாய். ஆயிரம் தடவைகள் படித்தபின் அந்த புத்தகங்களை முழுவதுமாக படிப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்வாய். அதிக அளவு கவனமாக, விழிப்புணர்வுடன் இருக்க இருக்க உனது தன்னுணர்வு ஆழமாகும். இதுதான் இதன் பொருள்.

ஆக இந்த ‘கதை சொல்லல்’ கலையின் வரலாறு, கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன என்பதை வெளிப் படுத்துகிறது. புராணக் கதைகள், தேவதைக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக்கதைகள், சாகசக் கதைகள், பேய் கதைகள், புனைவுக் கதைகள் என வெவ்வேறு பெயர்களைக் கொண்ட கதைகள், மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது, புதுப்புது உருவங்கள் பெற்று மீண்டும் புதுப்புது கதைகளாக உருவாக்கம் பெறுகின்றன.

எவ்வாறாயினும், தலைமுறைகள் கடந்து நிற்கும் இக்கதைகள் நமது முன்னோர்களின் விவேகத்தையும், ‘கதை சொல்லல்’ உத்தியையும் நன்கு பிரதிபலிக்கின்றன. உண்மையில், இந்த ‘கதை சொல்லல்’ கலை மனித குலத்தை விவரிக்கவும், பிணைக்கவும் உதவும் கலை என பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களும், உளவியலாளர்களும் நம்புகின்றனர்.ஆம்! உற்றுநோக்கின், இவ்வுலகில் வாழும் ஜீவராசிகளில் மனித இனத்திற்கு மட்டுமே கதைகளைப் புனையவும், கதை சொல்லிகளாக இருக்கவும் திறன் அமைந்திருக்கிறது.

இன்று உலகம் முழுதும் கொண்டாடப்படும் இந்த ‘கதை-சொல்லல் தினம்’, முதன்முதலில் 1991-ல் ஸ்வீடன் நாட்டில் தோன்றியது. சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்ட இந்த தினம், பின்னர் மேற்கு ஆஸ்திரேலியா-வில் வசித்த ‘கதை சொல்லிகள்’ மூலமாக 1997-ல், மீண்டும் உயிர்பெற்றது. இக்காலக்கட்டத்தில், தென்-அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் இத்தினத்தை தேசிய அளவில் கொண்டாடும் வழக்கம் உருவாயிற்று.

2001-ல், ‘ஸ்காண்டினேவிய கதை-சொல்லல் இணைய-அமைப்பு’ [Scandinavian storytelling web-network] “Ratatosk” என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வு குறுகிய காலத்திலேயே ஸ்வீடன் நாட்டிலிருந்து நார்வே, டென்மார்க், பின்லாந்து, மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளுக்கு 2003-களில் பரவியது. பின்பு, மிக விரைவிலேயே கனடா மற்றும் உலகின் பிற நாடுகளுக்கும் பரவியது.

இன்று இந்நிகழ்வு அகில உலக அளவில் ஒரு தினமாக அங்கீகாரம் பெற்று, ‘உலக கதை சொல்லல் தின’மாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 20-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகிலுள்ள ‘கதை சொல்லிகள்’ அனைவரும் ஒன்றிணைந்து பல ‘கதை சொல்லல்’ சார்ந்த நிகழ்வுகளை மக்களிடையே நிகழ்த்தி, அவர்களை மகிழ்ச்சிபடுத்துவர்.

இவ்வாறு வழிவழியாக வந்த ஒரு சாதாரண நிகழ்வு, இன்று உலக அளவில் கொண்டாடப்படும் தினமாக அமைந்ததில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. ஆம்! மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு கதைகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிச்சயம் பிரயோகித்திருப்போம். அப்படிப் பார்ப்பின் நாம் ஒவ்வொருவரும் கதை சொல்லிகளே!

இதோ நான் புறப்பட்டுவிட்டேன். இந்த ஊரின் ஏதாவதொரு வீட்டின் திண்ணையில், யாரவது ஒரு பாட்டி தன் பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கலாம். இந்த இரவில், பக்கத்துத் தெருவில் தாய் ஒருத்தி தன் குழந்தையைத் தூங்க வைக்க கதை சொல்லிக் கொண்டிருக்கலாம். நான் போகும் வழியில் யாராவது அக்காக்களோ, அண்ணாக்களோ தங்களது தம்பி தங்கைகளுக்குச் சோறு ஊட்ட கதை சொல்லிக் கொண்டிருக்கலாம். இவர்கள் சொல்லும் எந்த கதையையும் நான் கேட்க தயார். நீங்கள் எப்படி!

கதை-சொல்லல் தின வாழ்த்துகள்!”

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement