For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக இயன்முறை மருத்துவ தினம்...!

06:36 AM Sep 08, 2024 IST | admin
உலக இயன்முறை மருத்துவ தினம்
Advertisement

லகளவில் உள்ள இயன்முறை என்ப்படும் பிசியோதெரபி மருத்துவர்களால் உலக இயன்முறை மருத்துவ தினம் ஆண்டுதோறும் இதே செப்டம்பர் 8இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இத் துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப்பற்றி அதன் நன்மைகளையும் நுட்பங்களையும் எடுத்து சொல்லும் நோக்கில் இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு மூலம் 1996 ஆம் ஆண்டிலிருந்து இது கொண்டாடப்படுகிறது...!வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியின் வாழ்க்கை முறையால் நாம் கற்ற இயற்கை மருத்துவ முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை முற்றிலும் மறந்து விட்டோம். இதனால் நோய்கள் அண்டுவது சுலபமாகிவிட்டது. பல்வேறு மாற்று மருத்துவம், அதாவது ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம் என்று ஒவ்வொரு துறையும் தனக்கென தனிச்சிறப்பையும் கொண்டது இந்த மாறுபட்ட மருத்துவம், இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது இந்த. இயன்முறை மருத்துவம்..விரிவாகச் சொல்வதானால் மருத்துவத்தில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு சிகிக்சையாகி விட்டது, ‘பிசியோதெரபி’ (Physiotherapy) எனப்படும் இயன்முறை மருத்துவம். தற்காலத்தில் மருத்துவமனைகளுக்கு ஈடாக பிசியோதெரபி மையங்கள் இயங்குகின்றன.

Advertisement

பிசியோதெரபி என்றும் இயன்முறை எனவும் அழைக்கப்படும் ’பிசிக்கல் தெரபி’என்பது உடல் சார்ந்த நோய் அல்லது மூட்டு வலி, தசை வலி, பக்கவாதம், சிதைவு போன்ற நிலைமைகள் உள்ள மக்களுக்கு வழங்கி வரும் ஒரு முக்கிய சிகிச்சையாகும்.மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பது போல, நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பதும் ஆகும், பக்கவாதம், பார்கின்சன் நோய், எலும்பு முறிவுகள், மூட்டுவலி, சிஓபிடி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது.அதேபோல் நேயாளிகளின் தன்மையை பெறுத்து அவர்களுக்கு ஏற்றாற் போல் தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை பரிந்துரைக்கும் உரிமை பிசியோதெரபிஸ்ட்க்கு மட்டுமே உள்ளது.

Advertisement

ஒரு தனிநபருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டால், முதலில் நோயாளியை உடல்ரீதியாக மதிப்பீடு செய்து,அவர்களின் பிரச்சனையைக் கண்டறிவார்கள் ,பின்பு அந்த நோயாளிக்கு எந்த உடற்பயிற்சி தேவையோ அது நாள் வாரியாக தொகுத்து வழங்கப்படும்.மேலும் பயிற்சிகளைச் செய்யும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன என்பதையும், ஒவ்வொரு உடற்பயிற்சி அமர்வுகளுக்கு இடையில் சரியான ஓய்வு இடைவெளியில் குறித்த ஆலோசனைகளும் வழங்கவார்கள்.சரியான பயிற்சிகள் மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் , நோயாளிகள் விரைவில் குணமடைந்து , ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்

இப்படி ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறையாக்கும் இது . உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும். தினமும் பிசியோதெரபி எடுத்துகொள்ளும் மூலம் நேயாளிகளை சுறுசுறுப்பாக வைத்து இது உதவுகிறது.மேலும் மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், சிகிச்சைக்கு பின் அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும்.இது ஊசி, மருந்துகளை பயன்படுத்தாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் பிசியோதெரபி உதவுகிறது. முன்னரே குறிப்பிட்டது போல் இன்றைய நவீன காலத்தில் பட்டிதொட்டி எங்கும் பிசியோதெரபி மையங்கள் முளைத்துவிட்டன.

உலகளவில் மருத்துவ துறையின் முன்னோடியாகத் திகழும் இந்தியாவில் நோய்களுக்கும் பஞ்சமில்லை. மருத்துவ முறைகளுக்கும் பஞ்சமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தேசிய அளவில் உடல் இயலாமையால் பாதிக்கப்படுவதில் நான்காம் இடத்தை இந்தியா தட்டி செல்லுகிறது. கால் மூட்டு வலி, பெரும்பாலும் பெண்கள் 50 வயதை எட்டியவுடனும், ஆண்கள் 60 வயதை எட்டியவுடனும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன், விட்டமின் டி பற்றாக்குறை, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் குறைபாடுகள், இந்தியன் டாய்லெட் மற்றும் காலணிகளில் குறைபாடுகளும் மூட்டு தேய்மானத்திற்கு காரணமாக உள்ளன. இந்தியாவில் வருடத்திற்கு 15 கோடி மக்கள் கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவே சீனாவில் 4 கோடி மக்கள் மட்டுமே மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. எனினும் இந்தியாவில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை பெரிய அளவுக்குச் செய்யப்படுகிறது. 1994ம் ஆண்டு வெறும் 350 மூட்டு மாற்று அறுவை மட்டுமே செய்யப்பட்டது. இதுவே 2018ம் ஆண்டில் 1,50,000 மூட்டு மற்றும் அறுவை சிகிச்சையாக இமாலய வளர்ச்சி கண்டுள்ளது. 2022ம் ஆண்டில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை ஒரு மில்லியனைத் தொடும் என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல். ஆகவே இதனைப் பற்றி விழிப்புணர்வு அவசியம்'

இந்தியாவைப் பொறுத்தவரையிலும் பிசியோதெரபி மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. அலோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைகளை வழங்குகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளில் பிசியோதெரபிஸ்ட்டுகளை தன்னிச்சையாக சிகிச்சைக்காக அணுக முடியும். மருந்துகள் இல்லாததால் பக்கவிளைவுகளுக்கான வாய்ப்புகளும் குறைவு என்பதால் பிசியோதெரபி சிகிச்சையை நாடுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தே வருகிறது.இந்தியாவைப் பொறுத்தவரையிலும் பிசியோதெரபி மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. அலோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைகளை வழங்குகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளில் பிசியோதெரபிஸ்ட்டுகளை தன்னிச்சையாக சிகிச்சைக்காக அணுக முடியும். மருந்துகள் இல்லாததால் பக்கவிளைவுகளுக்கான வாய்ப்புகளும் குறைவு என்பதால் பிசியோதெரபி சிகிச்சையை நாடுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தே வருகிறது.

மேலும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இயன்முறை மருத்துவத் துறையின் பயன்பாட்டினால் மருத்துவத் துறையில் அரசு செலவினங்கள் எவ்விதம் குறைந்துள்ளன, மற்ற மருத்துவப் பணியாளர்களின் சுமை எத்தனை சதவீதம் குறைந்துள்ளன, சம்பந்தப்பட்ட நோயாளியின் மருத்துவச் செலவு எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட காரணிகளைக் கண்டறிய அரசால் அடிக்கடி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இயன்முறை மருத்துவத்தால் செலவினங்கள் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது என்பதை அந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 8 அன்று உலக பிசியோதெரபி தினம் கடைப்பிடிக்கப்படும் வேளையில், இந்தியாவில் இயன்முறை மருத்துவத் துறையின் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில், அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 240 இயன்முறை மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பெருகிவரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குவதோடு அனைத்து அரசுத் தலைமை மருத்துவமனைகளிலும் ‘பிசியோதெரபிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்’ என்கிற பணியிடத்தை உருவாக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் சராசரி ஆயுட்காலம் 69.8 ஆண்டுகள் என உள்ள நிலையில், இயன்முறை மருத்துவத் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், ஆயுட்காலத்தை நீட்டிக்க ஆகும் செலவைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்க முடியும் என்பதை இந்நாளில் சுட்டிக் காட்டுகிறோம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement