For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மாதவிடாய் சுகாதார தினம்!

08:27 AM May 28, 2024 IST | admin
மாதவிடாய் சுகாதார தினம்
Advertisement

ண், பெண் பாகுபாட்டை காட்டத் தொடங்கும் முதல் நிகழ்வு. பெண்ணிற்கு போடப்படும் முதல் தடைக்கல். இன்னும் 40 ஆண்டுகள் படப்போகும் அவஸ்தைதான் முதல் தடவையாய் வந்து விட்ட மாதவிடாய். அந்த மாதவிலக்கின்பொழுது கருப்பையில் இருந்து 28 நாட்களுக்கு ஒருமுறை இரத்தமும், வழவழப்பான திரவமும் பெண்குறி வழியாக வெளிவரும்; இந்நிலை சாதாரணமாக 3லிருந்து 7 நாட்கள் வரை நீடித்துக் காணப்படும். மாதவிலக்கு பெண் பூப்பெய்தியதிலிருந்து மெனோபாஸ் என்று சொல்லப்படும் சூலக ஓய்வு வரை சுமார் 45 வயதுவரை நீடித்து இருக்கும்.அதாவது மாதவிலக்குக்கு 1 வாரத்திற்கு முன்னர் உடலில் கூடுதலாக நீர் சேமித்து வைக்கப்படுகிறது. எடை கூடுகிறது. உடல் பருத்தாற் போலத் தோன்றும். ஆனால் இந்நிலை மாதவிலக்குக்குப் பிறகு மாறிவிடும். நீரும் வெளியேறுவதால் உடலில் இறுக்கம் மட்டுமல்ல மன இறுக்கமும் தளர்கிறது.  மாதவிடாய் நாட்களின் சுத்தம் குறித்த விழிப்புணர்வோடு மாதவிடாய் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வை நீக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதுதான் ‘உலக மாதவிடாய் சுகாதார நாள்’. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெறும் என்பதால் ஆண்டுதோறும் மே 28 அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisement

மாதவிலக்கு பல ஹார்மோன்களின் விளைவுகளேயாகும். மேலும் கருவுறாத நிலையில் மாதந்தோறும் கருப்பையை ஆயத்தப்படுத்தி, குறிப்பிட்ட காலம் கடந்த பின்னர் அந்த ஏற்பாடுகளைக் கலைத்து வெளியேற்றி விட்டு, மீண்டும் ஆயத்தப்படுத்துவது ஹார்மோன்களின் பணிகளாகும். எனவே, ஹார்மோன்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சுகாதாரம் முக்கியம் என்பதால் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

அந்த காலங்களில் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ள பழைய துணிகளை கிழித்து பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் சானிட்டரி நாப்கின், டாம்பூன், மென்ஸ்ட்ருவல் கப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. துணிகளை பயன்படுத்துவது சுகாதாரமற்ற முறையாகும். இதனால், தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், மாதவிடாய் காலத்தில் யாரும் துணிகளை பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் முக்கியம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்று மட்டும் இதுவரை மாறவில்லை. மாதவிலக்கு என்பது நடைமுறை வாழ்வில் சங்கடந்தரும் ஒன்றாகவே உள்ளது. இதன் நடைமுறைத் துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளப் பலர் முயல்வதேயில்லை. ஆனால் மருத்துவ அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. நாம்... என்ன செய்யலாம்? அறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகளை நமது பிள்ளைகளுக்குக் கூறாதிருக்கலாம்.

பெண் குழந்தைகள் பிறக்கும் போதே அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருக்க பழகும் அம்மாக்கள், குழந்தைகள் வளர்ந்த பிறகும் அதை பழக்க வேண்டும். பெண் பிள்ளைகள் வளரும் போதே இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பூப்படைந்த காலத்துக்கு பின்பு பெண் உறுப்பில் வெளிப்படும் வெள்ளை படுதலும், மாதவிடாய் குறித்த உதிர போக்கும் பெண் பிள்ளைகளுக்கு முன்கூட்டியே உணர்த்துவது அம்மாக்களின் கடமை.பெண் உறுப்பு சுத்தம் வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் அந்த இடத்தை அதிகப்படியான சோப்பு கொண்டு செய்ய வேண்டியதில்லை. சுத்தமான நீரில் நன்றாக கழுவினாலே போதுமானது. மாதவிடாய் நாட்களின் போதும் வாடை நீங்க ஒரு வேளை மட்டுமே சோப்பு கொண்டு கழுவ வேண்டும். இதை நிச்சயம் ஒவ்வொரு பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை எல்லா காலங்களிலும் எல்லா வயதிலும் கூட பின்பற்ற வேண்டும். உலகளவில் சர்விகல் கேன்சருக்கு காரணங்களில் பெண் உறுப்பில் பரவும் கிருமித்தொற்றும் ஒரு காரணமாக இருக்கிறது. பூப்படைந்த காலத்துக்கு பிறகு பெண் பிள்ளைகளுக்கு இதை பயன்படுத்துவதிலேயே மிகுந்த குழப்பமும், ஒருவித சலிப்பும் வெறுப்பும், வெளியில் பேச வெட்கமும் உண்டாகும். மாதவிடாய் நாட்களில் ஒவ்வொருவர் உடல் வாகுக்கு ஏற்ப உதிரபோக்கிலும் மாற்றம் இருக்கும். சிலருக்கு அதிகப்படியான உதிரபோக்கு இருக்கும். சிலருக்கு குறைவான அளவு இருக்கும். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அசெளகரியம் உண்டாகாத பொருளை பயன்படுத்துங்கள்.

மாதவிடாய்க் காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

மாதவிடாய் நேரத்தில் உடல் களைப்பாக இருக்கும். அப்பொழுது வேலையைச் சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அச்சமயத்தில் அதிகமாக உணரப்படும். பெண்கள் தான் உபயோகிக்கும் உள்ளாடைகளையும், டவல்களையும் (சானிடரி நாப்கின்ஸ்) மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைக்காவிட்டால் தொற்றுக்கான கிருமிகள் பரவி கருப்பையில் உள்ளே இருக்கும் இரத்தக் குழலில் எளிதில் புகுந்து தொற்று மற்றும் டெட்டனஸ் என்னும் வாய்ப்பூட்டு நோயையும் உண்டு பண்ணும்.

சாதாரணமாக பெண்ணுக்கு மாதவிலக்கில் 14ஆவது நாளில் அடிவயிற்றில் வலி உண்டாகும். இவ்வலியானது அண்ட அணு சூற்பையிலிருந்து வெளிவருவதையே குறிக்கிறது.

சிலருக்கு அடிவயிற்றில் வலப்புறமோ இடப்புறமோ இதே காரணத்தினால் வலி உண்டாகும். மாதவிலக்கின்போது தினசரி வேலைகளைப் பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இதேப்போல் மாதவிலக்கின்போது சுகாதாரத்திற்காக மட்டுமே உடல்உறவு கொள்வது கூடாது என்று கூறுப்படுகிறது. மாதவிலக்கின்போது உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்தியாவில் நிறையப் பழங்கதைகள் உள்ளன. இக்கதைகள் எல்லாம் சுகாதாரத்தினைப்பற்றி அறியாத காலத்தில் ஏற்பட்ட கதைகள் ஆகும்.

தற்போது பெண் பிள்ளைகள் வெகு விரைவில் வயதுக்கு வருவதால் மாதவிடாய் நாட்களை வலியுடனும் சிரமத்துடனும் கழிக்கிறார்கள்.மேலும் உதிரபோக்கு கண்டு அச்சம் கொண்டு அவ்வபோது அதை சுத்தப்படுத்தவும் தயக்கம் கொள்கிறார்கள். இவை மிகப்பெரிய ஆபத்தை எதிர்காலத்தில் உண்டாக்கும் என்பதை ஒவ்வொரு பெண்பிள்ளைகளும் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத்தருவது அம்மாக்கள் கடமை.

சிலர் நீண்ட நேரம் நாப்கினை மாற்றாமல் இருக்கலாம், நீண்ட நேரம் உறுப்பினுள் டேம்பன் வைத்திருக்கலாம். இவற்றை மாற்றும் போது பெண் உறுப்பை சுத்தம் செய்யாமல் அப்படியே வேறு மாற்றலாம். இதனால் கூட அரிப்பும் நமைச்சலும் உண்டாகும். இவை தொடரும் போது மன உளைச்சலையும் உண்டாக்கும்.சமயங்களில் உரிய இடைவெளியில் உரிய சுத்தத்தோடு இதை மாற்றினாலும் அரிப்பு, நமைச்சல் வந்தால் அவை நீங்கள் பயன்படுத்து பொருள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் காரணமாக இருக்கலாம். அதனால் உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் இந்த பிரச்சனைக்கு உள்ளாகிறார்களா என்பதை ஒவ்வொரு மாதவிடாய் கால நாட்களிலும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

பள்ளிக்கு செல்லும் பெண்களும், வேலைக்கு செல்லும் பெண்களும் 3 அல்லது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றுவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். அதே நேரம் ஓவ்வொரு முறை நாப்கின் மாற்றும் போது சுத்தமான நீரால் பெண் உறுப்பை கழுவிய பிறகு நாப்கின் மாற்ற வேண்டும். இதே போன்று வேலைக்கு செல்லும் பெண்கள் மென்சுரல் கப் பயன்படுத்தினால் உரிய இடைவெளியில் அதை அகற்றி உதிரத்தை வெளியேற்றி மீண்டும் பயன்படுத்த வேண்டும்.மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் உள்ளாடைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் மட்டும் தனி உள்ளாடையை பயன்படுத்துவது மேலும் பாதுகாப்பானது. இந்த நாட்களில் உள்ளாடையை துவைக்கும் போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதோடு வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும். இதனால் கிருமி தொற்று உண்டாகாது.

கூட்டுக் குடும்பங்களில் இம்மூன்று நாட்கள் வீட்டைவிட்டு ஒதுக்குப்புறமாக உட்கார வைப்பது, அப்பெண்ணிற்கு அதிக வேலையிலிருந்து ஓர் ஓய்வுக்கான நேரமாகவே அமையும். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் இம்மாதிரியான கட்டுப்பாடுகள் இல்லை.

நாட்டுப்புறங்களில் பழக்கத்தில் வந்துவிட்டதால் செய்யும் மூடச்சடங்குகளை தவிர்த்துப் பார்த்தால் அவர்கள் கொடுக்கும் உணவு வகைகள் அந்தப் பெண்ணை எந்தக் காலத்திலும் வலிமையாக வைத்திருக்கும். முதலில் நல்லெண்ணையும், முட்டையும் கொடுப்பார்கள். அடுத்த 15 நாட்களுக்கு உளுந்து, வெந்தயம் போன்ற பொருட்களால் ஆன களி உணவு வகைகளைக் கொடுத்து மகிழ்வுடன் இருக்கச் செய்வார்கள்.

ஸ்பெஷல் குறிப்பு 💥:

பெண் குற்றவாளிகள்பற்றிய ஆய்வில் நான்கு மடங்கு அதிகக் குற்றம் மாதவிலக்கின்போதே நிகழ்ந்துள்ளன . தொழிற் சாலைகளில் பணிபுரிவோர் விருப்புப் பெறுகின்றனர் அல்லது சரிவரப் பணிபுரிவதில்லை. மேலும் வேலைத்திறனும் குறைந்தே காணப்படுகிறது🙏. காரோட்டிகளான பெண்கள் அதிக அளவு விபத்துக்குள்ளாவதாகப் பதிவுகள் கூறுகின்றன. மேற்குறித்த தகவல்களும் பதிவுகளும் மருத்துவ உலகை உலுக்குகின்றன

தமிழ்செல்வி

Tags :
Advertisement