For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச மலேரியா தினம்!

06:29 AM Apr 25, 2024 IST | admin
சர்வதேச மலேரியா தினம்
Advertisement

ண்டு தோறும்  தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள். இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர். மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி 2021 ஆம் ஆண்டு மட்டும் உலளவில் 21.7 கோடி பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6.19 லட்சம் பேர் மலேரியாவால் உயிரிழந்தனர். ஆப்ரிக்காவிலேயே அதிகளவில் பாதிப்பு இருந்தாலும் கூட இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 20 ஆயிரம் பேராவது மலேரியாவால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் தேதியன்று சர்வதேச மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவைத் தடுப்பதிலும் மலேரியாவை ஒழிப்பதிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியா இல்லாத உலகத்தை நோக்கிச் செயல்பட, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஒன்றிணைக்க இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

Advertisement

பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட, அனோபிலிஸ் என்ற பெண் கொசுக்கள் மனிதனை கடிப்பதனால் இந்த கொடிய நோய் பரவுகிறது. அனோபிலிஸ் கொசு மனிதனை கடிப்பதனால் இந்த கொடிய நோய் பரவுகிறது. அனோபிலிஸ் கொசு மனிதனை கடிக்கும்போது இந்த ஒட்டண்ணி மனிதனுடைய ரத்த ஓட்டத்தில் கலந்து மலேரியா நோயை பரப்புகிறது.கொசு கடித்த சில வாரங்களில் காய்ச்சல், அதிகம் வியர்த்தல், சோர்வு, தசைவலி, குளிர், வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர், கழிவுநீர், சாக்கடை போன்ற இடங்களில் உற்பத்தியாகும் கொசுக்களே மலேரியா காய்ச்சலை உருவாக்குகின்றன.வீடுகளில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.வீடுகளில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.

Advertisement

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டு மக்கள் தொகை 33 கோடி. இதில் ஒவ்வொரு ஆண்டும் 7.5 பேருக்கு மலேரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும், 8 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் தேசிய புள்ளிவிவரம் கூறுகிறது. உலக மலேரியா ஆய்வறிக்கை 2014 படி, இந்திய மக்கள் தொகையில் 22 சதவிகிதம் பேர் மிக அதிக அளவில் மலேரியா பாதிப்புக்கு ஆளாகும் பகுதியில் வசிப்பதாகவும், வெறும் 11 சதவிகிதம் பேர்தான் மலோரியா தொற்று பாதிப்பு இல்லாத பகுதியில் வசிப்பதாகவும் தெரிவிக்கிறது.பொதுவாக, மிகவும் பின்தங்கிய, குடிசை மற்றும் வறுமையில் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில்தான் மலேரியாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் மலேரியாவால் உயிரிழப்பு இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் மலேரியா காய்ச்சல் தொற்று பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள மலேரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மலேரியா பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா. மேலும், இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. 2019ம் ஆண்டு மலேரியா பாதிப்பு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் (3,38,494 பாதிப்பு, 77 உயிரிழப்பு) குறைந்துள்ளது.

மலேரியா நோயின் அறிகுறிகள்:

 தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் வெளிப்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு 7 நாளில் கூட வெளிப்படலாம்.

🦟மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலை வலி, உடல் வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்க் காய்ச்சல் ஏற்படும். உடல் நடுக்கம் எடுக்கும். இது சுமார் அரை மணி நேரம் நீடிக்கும்.

🦟 இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும்.

🦟 மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து, வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும். இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு, இதே காய்ச்சல் மறுநாளோ ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறையோ மீண்டும் வரும்.

🦟 இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்:

🦟மலேரியா பரவக் காரணம் கொசுதான். எனவே, கொசு ஒழிப்பு மட்டுமே மலேரியா காய்ச்சலை குறைக்க ஒரே வழி. கொசுக்களை ஒழிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அபாயம் பெருமளவு குறைக்கப்படும்.

🦟கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்யலாம். வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் கொசுக்களை விரட்டலாம். இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலோரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

🦟வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தை தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும்.

🦟 சுத்தமான தண்ணீரில் மலேரியா கொசுக்கள் உற்பத்தி ஆவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும்.

🦟வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைப்பதன் மூலமும் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம்.

🦟பொதுவாக மலேரியா, டெங்கு உள்ளிட்ட கொசுவால் ஏற்படக்கூடிய நோய்களை தடுக்க கொசு விரட்டிகள் பயன்படுகின்றன. ஆனால், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள இடத்தில் கொசுவிரட்டிகளை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கொசு வலையை பயன்படுத்துவதோடு, மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement