மீம்ஸ்களால் சர்வதேச அளவில் பிரபலமான கபோசு நாய் உயிரிழப்பு!
சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமடைந்த ”கபோசு” என்ற பெயர் கொண்ட நாய், ”ஷிபா இனு” என்ற இன வகையைச் சேர்ந்தது என கூறப்படுகிறது. இதற்கு 19 வயது என தகவல் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய பின், முன்பு இருந்த பறவை லோகோவை மாற்றினார். பின்னர் நாய் புகைப்படத்தை மாற்றினாரே, அந்த நாய்தான் இந்த கபோசு.இந்த நாயானது, மீம்ஸ் போடுவர்களுக்கு மிக நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த நாயின் ரியாக்சன் வேற லெவலில் இருக்கும் என்றே பலரும் தெரிவிக்கின்றனர். சில கருத்துக்களுக்கு, பதில் தெரிவிப்பதற்காக , இந்த நாய் ரியாக்சனின் புகைப்படத்தை அனுப்பினாலே போதும். எதையும் விரிவாக சொல்ல தேவையில்லை. அதனால், இந்த நாய் புகைப்படத்தை பலரும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
முன்னதாக ஜப்பானை சேர்ந்த ஒருவர் கடந்த 2008ம் ஆண்டு கபோசுவை தத்தெடுத்து வளர்த்து வந்தார். 2010ம் ஆண்டு அண்டஹ் உரிமையாளர் கபோசுவைக் கொண்டு ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது, கபோசு கொடுத்த அழகான போஸ்களும், ரியாக்ஷன்களும் இணையத்தில் பகிரப்பட்டன. இதையடுத்தே , நெட்டிசன்கள் கபோசுவின் இந்த புகைப்படங்களை மீம்களாக உருவாக்கியதன் மூலம் பிரபலமானது.
இதைதொடர்ந்து, 2013ம் ஆண்டில் கபோசுவின் படத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoinஐ லோகோ உருவாக்க தூண்டியது.
17 வயதான கபோசு கடந்த 2022ம் ஆண்டு முதல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு வந்தது. அதையொட்டி தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை தூக்கத்தில் அமைதியாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து Dogecoin தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், கபோசுவின் மறைவு சமூக வளைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த கபோசுவின் பிரியாவிடை வரும் மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது.