தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக கழுதை தினமின்று

10:02 AM May 08, 2024 IST | admin
Advertisement

ன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு, மாடு, குதிரை, நாய், பூனையைபோல, சில வீடுகளில் கழுதையும் வீட்டு விலங்காக இருந்தது. குறிப்பாக, சலவைத் தொழிலாளர்களின் வீடுகளில் 5-க்கும் மேற்பட்ட கழுதைகள் காணப்படும். துணிகளை சலவை செய்ய ஆற்றுக்கு கொண்டுசெல்லவும், வெளுத்த துணிகளை திரும்ப எடுத்து வரவும் கழுதைகளைப் பயன்படுத்தினர்.

Advertisement

மொத்தத்தில் தமிழர்கள் வளர்க்கும் கால்நடைகளில் கழுதைக்கு முக்கியப் பங்குண்டு. சங்க இலக்கியங்களில் இவ்விலங்கு பொறைமலி கழுதை, நெடுஞ்செவிக் கழுதை என அகநானூற்றுப் பாடல்க ளிலும், வெள்வாய்க் கழுதைப் புல் லினம் என புறநானூற்றுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மிளகு, உப்பு மூட்டைகளை கழுதை களின் மீது வணிகர்கள் ஏற்றிச் சென்றதை பொருநராற்றுப் படையும் (77-82), அகநானூறும் (207:5-6) குறிப்பிட்டுள்ளது.

Advertisement

நாட்டார் தெய்வ வழிபாட்டில் கழுதைகளுக்கு என்று தனி இடமுண்டு. அமிர்தம் எடுப்பதற்கு பாற் கடலை கடைந்தபோது அதிலிருந்து முதலாவதாக வந்த தெய்வம் ஜேஷ்டை. ஜேஷ்டை என்றால் மூத்த, முதலாவது என்று பொருள். தமிழில் மூத்த தேவி (மூதேவி) என்றழைக்கப்படும் இந்த தெய்வத்தின் வாகனம் கழுதையாகும். கழுதைகள் குறுக்கே செல்வதும், கணைப்பதும் நல்ல சகுனமாக நம்பப்படுகிறது.ராமேசுவரம், தனுஷ்கோடி கழுதைகள் ராமேசுவரம் தீவு பகுதியில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் முத்து குளித்த முத்துக்களை மூட்டைகளாகக் கட்டி பொதி சுமக்கப் பயன்படும் வாகனங்களாக கழுதைகளே பயன்படுத்தப்பட்டன. மேலும் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாருக்கு கப்பல் போக்குவரத்து இருந்த காலகட்டத்தில் பயணிகளின் பொதிகளைச் சுமப்பதற்கும் அதிகளவில் கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டன.

மனிதர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக கழுதைகள் வாழ்ந்து வந்தாலும் அறி வியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி சரக்கு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக கழுதைகள் பயன்பாடு முற்றிலும் குறைந்து போயின. கழுதைகளை அதிகளவில் வளர்த்து வந்த சலவைத் தொழிலாளர்கள் கூட தற்போது கழுதைகள் வளர்ப்பதை நிறுத்தி விட்டனர். இதனால் மனிதர் களுக்கும், கழுதைகளுக்கும் இடையில் இருந்த நெருக்கமான பிணைப்பு அறுந்து போனது

என்னதான் கழுதைகள் அப்ராணி விலங்குகளாக இருந்தாலும் இது ஒரு தன்மான சிங்கம். தனக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் என்னதான் வற்புறுத்தினாலும் அடித்தாலும் அந்த இடத்தை விட்டு நகராது. அதை மீறி நாம் கட்டாயப்படுத்தினால் அது நம்மை உதைத்து விடும்.அதுவே கழுதைக்கு ஒருவரை பிடித்து விட்டால் சோறு தண்ணீர் இல்லாமல் பாரம் தூக்கும். கழுதைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சில சிறப்பூட்டும் விஷயத்தை சொல்லி உள்ளார்கள் அதாவது கழுதைகள் எந்த விஷயத்தை செய்தாலும் அதை யோசித்து தான் செய்யுமாம். பாதுகாப்பு இல்லை என அது உணர்ந்தால் அந்த விஷயத்தை செய்யாது.

பொதிகளை சுமந்துகொண்டு, நீண்ட தொலைவுக்கு நடக்கும் உடல் வலிமையைக் கொண்டவை என்பதால், சில மலைப் பிரதேசங்களில், கடினமான மலைப் பாதைகளைக் கடந்து செல்ல வேண்டிய இடங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுசெல்ல இன்றும் கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய காலத்தில் சமுதாயத்தில் கழுதைகள் மிகப் பெரிய சொத்தாக கருதப்பட்டு வந்தன . சீதனம் வழங்குவதில் கழுதைகளின் எண்ணிக்கை பிரதானமானதாகவும் இருந்துள்ளது என்றாலும் அரிய கால்நடைப் பட்டியலுக்குப் போய் விட்ட கழுதைகளின் நலன் காக்க இந்த உலக கழுதை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, பாலைவன விலங்குகள் மீது சிறப்பு அக்கறை கொண்ட விஞ்ஞானி ராஸிக் ஆர்க்கின் யோசனையிது என்பது குறிப்பிடத்தக்கது..

Tags :
DonkeyDonkey DayWorld Donkey Day
Advertisement
Next Article