For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி யுத்தத்திற்கு முன்னேறியது

01:06 PM Nov 16, 2023 IST | admin
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்   இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி யுத்தத்திற்கு முன்னேறியது
Advertisement

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. இதில் சிலபல எதிர்பார்ப்புகளை எகிறச் செய்த முதல் அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் களைகட்டியது. இந்த போட்டியை கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்கம், சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் கண்டுரசித்தனர். புள்ளிப்பட்டியில் முதல் இடம் பிடித்த இந்திய அணி - நான்காம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. . இப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து முதலில் இறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா,சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.

Advertisement

போட்டி தொடங்கியது முதல் ஒரு புறம் சுப்மன் கில் நிதானமாக விளையாட மறுபுறம் ரோஹித் ஷர்மா அதிரடி விளையாட அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலி களமிறங்க, மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 79* ரன்கள் எடுத்து திடீரென காலில் ஏற்பட்ட வலி காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

Advertisement

இதைத்தொடர்ந்து கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். இவர்களின் விக்கெட்டை பறிக்கமுடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. இருப்பினும் அதிரடியாக விளையாடிய விராட் கோலி தனது 50-ஆவது ஒருநாள் சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். அடுத்த சில நிமிடங்களில் விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி தொடர்ந்து 67 பந்துகளில் சதத்தை அடித்து 105 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 எடுக்க , கே.எல்.ராகுல் 39* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 398 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரன் இருவரும் களமிறங்கினர்.

இருவரும் ஆட்டம் தொடங்கிது முதல் நிதானமாக விளையாடி வந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர் ஷமி வீசிய முதல் பந்தலையே டெவான் கான்வே 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க அடுத்து இரண்டு ஓவர் பிறகு மீண்டும் ஷமி பந்து வீச களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரன் கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 39 ரன்னில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் டேரில் மிட்செல் , கேன் வில்லியம்சன் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். இருப்பினும் நிதானமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க இந்திய அணி சற்று திணறி வந்தது. இதில் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் விளாசினார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் சூரியகுமார் யாதவரிடம் கேட்ச் கொடுத்து 69 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த டாம் லாதம் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த மார்க் சாப்மேன் 2 ரன்னில் வெளியேற களத்தில் அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 119 ரன்னில் 7 சிக்ஸர் , 9 பவுண்டரி என மொத்தம் 134 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 327 ரன்கள் எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக சென்றுள்ளது.

இதன் மூலம் 2019 அரையிறுதி தோல்விக்கும், அப்போது தோனி சிந்திய கண்ணீருக்கும் பதிலடி கொடுத்தது இந்தியா. லீக் போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் ஐந்து விக்கெட்டுகளை சமி வீழ்த்திய நிலையில் ஒட்டுமொத்தத்தில் 12 விக்கெட்டுகளை சாய்த்து நியூசிலாந்தை சரணடைய வைத்துள்ளார். அத்துடன் மூன்றாவது முறையாக நடப்பு உலகக் கோப்பையில் ஆட்டநாயகனாகவும் சமி தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார். பேட்டிங்கில் விராட் அதிக ரன் அடித்த வீரர், அதிக சதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார் என்றால், பந்துவீச்சில் அதிக விக்கெட், அதிக ஐந்து விக்கெட் எடுத்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சமி படைத்து மேன் ஆஃப் தி சீரஸ் போட்டியை கடுமையாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement