For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக பருத்தித் தினம்!

06:46 AM Oct 07, 2024 IST | admin
உலக பருத்தித் தினம்
Advertisement

ருடா வருடம் அக்டோபர் 7 அன்று சர்வதேச பருத்தி நாள் அனுசரிக்கப்படுகிறது, இது பருத்தியின் உலகளாவிய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும், பருத்தி மதிப்பு சங்கிலியில் விவசாயிகள், செயலிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வணிகங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் முயற்சியாகும்.விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீதத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பருத்தி, துணி உலகில் 80 நாடுகளில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் இத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இது வறட்சியை தாங்கி விளையும் பயிர் என்பதால் உற்பத்தி செலவு குறைவு.உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீதத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பருத்தி, துணி உலகில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆப்பிரிக்காவின் பெனின், பர்கினோபாஷோ, சாட், மாலி நாடுகளின் வேண்டுகோளை ஏற்று உலக வர்த்தக அமைப்பு 2019 அக்., 7ல் இத்தினத்தை அறிவித்தது. பருத்தி விளைச்சலில் இந்தியா, அமெரிக்கா, சீனா முதல் 3 இடங்களில் உள்ளன. பெரும்பான்மை நாடுகளில் வளர்க்கப்படும் உலகளாவிய பொருளாக பருத்தி விளங்குகிறது.

Advertisement

இந்நாளில் பருத்தி ஆடைகள் அணிவதன் நன்மைகள் குறித்தும், அவற்றின் பராமரிப்பு குறித்தும் அறிந்து கொள்வோமா?

1. பருத்தி ஆடைகள் அனைத்துவிதமான கால சூழலிலும் அணிவதற்கு ஏற்றவை. பருத்தி இழைகள் இயற்கையான யுவி எதிர்ப்பைக் கொண்டுள்ளதால், சுட்டெரிக்கும் சூரியனின் சில தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுக்கிறது. வெயில் காலத்தில் வியர்வையை உறிஞ்சி, உடலை குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் குளிரிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

2. நைலான், பாலியஸ்டர், அக்ரலிக் (சிந்தடிக்) போன்ற செயற்கை இழை வகை ஆடைகளைப் போல அல்லாமல், பருத்தி ஆடைகளைத் துவைக்கும்போது மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண் துகள்களை அவை வெளியிடுவதில்லை.

3. பருத்தி ஆடைகள் அணிய மென்மையாகவும், அணிவதற்கு வசதியாகவும் இருக்கின்றன. உள்ளாடைகளை பருத்தியில் அணிந்தால் நன்றாக வெப்பத்தை உறிஞ்சி, புண்கள் வராமல் தடுக்கிறது. பருத்தித் துணியை பராமரிப்பது மிகவும் சுலபம்.

4. பருத்தியில் பல வகைகள் உண்டு. மென்மையான பட்டு ஆடைகள் முதல் கடினமான டெனிம் ரக சட்டைகள் வரை பல்வேறு ஆடைகளில் பருத்தி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு சாயமிடுவது எளிது.

5. பருத்தி இயற்கையாக செடியில் விளைகிறது. பருத்தி செடியில் இருந்து பஞ்சு எடுத்த பின்பு, பருத்தி விதைகள் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதில் இருந்து எண்ணெய்யும் தயாரிக்கலாம். பருத்தி செடியின் குச்சிகள் அறுவடைக்குப் பின்பு நிலத்தில் உரமாகப் பயன்படுகிறது.

6. பருத்தி துணி மிகவும் கெட்டியானது. மற்ற ரேயான் துணிகளைப் போல சுருங்காமல் தண்ணீரில் போடும்போது இன்னும் கெட்டியாகிறது. வாஷிங் மெஷின் உதவியின்றி காட்டன் துணிகளைத் துவைக்கலாம்.

7. மென்மையான தோல் அமைப்பு கொண்டவர்களுக்கு பருத்தி ஆடைகள் ஏற்றது. இது எந்த விதமான சரும அலர்ஜிகளையும் ஏற்படுத்துவதில்லை.

8. இது இயற்கையாகக் கிடைக்கும் பொருள் என்பதால் நூறு சதவீதம் இயற்கையாக சிதையும் தன்மை கொண்டது. மண்ணுக்குள் மக்கி விடுவதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது.

9. பருத்தி ஆடைகள் நீடித்திருக்கும் தன்மை கொண்டது. விவசாயிகளின் நண்பனாக கருதப்படுகிறது. பருத்தித் துணியால் ஆன படுக்கை, விரிப்பு, போர்வை, நல்ல தூக்கத்தைத் தருகிறது.

10. பருத்தி இழைகள் இயற்கையாகவே சுருக்கங்களை எதிர்க்கும். அதாவது, பல முறை துவைத்த பிறகும் அவற்றின் வடிவத்தை பராமரிக்க முடியும்.

பருத்தி ஆடைகள் பராமரிப்பு:

பருத்தி ஆடைகள் 60 விதமான வடிவங்களில் கிடைக்கின்றன. அதன் ஒவ்வொரு ரகத்துக்கும் ஏற்றவாறு அவற்றைப் பராமரிப்பது அவசியம்.

1. பருத்தி ஆடைகளை அணிந்த பின்பு, சிறிது நேரம் காற்றாட கொடியில் உலர்த்தவும். பின்பு, அதன் லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை படித்துப் பார்த்து அதன்படி துவைக்கலாம்.

2. நூறு சதவிகிதம் பருத்தியாலான ஆடைகளை குளிர்ந்த நீரில் மெல்லிய ரக டிடர்ஜென்ட் கொண்டு துவைக்க வேண்டும். இல்லையெனில் ஷாம்பூவினால் துவைக்கலாம்.

3. வெள்ளை நிற பருத்தி ஆடைகளை எப்போதும் தனியாகத் துவைக்கவும். பிற துணிகளோடு சேர்த்துத் துவைத்தால் அவற்றின் சாயம் வெள்ளைத்துணியில் ஒட்டக்கூடும்.

4. பருத்தி ஆடைகளைத் துவைக்கும்போது ஃபேப்ரிக் சாஃப்ட்னர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது பருத்தி ஆடைகளின் வண்ணத்தை பாதிக்கும்.

5. ‘சுளீர்’ என்று அடிக்கும் வெயிலில் பருத்தி ஆடைகளைக் காயப் போடக்கூடாது. இதனால் சாயம் போவதுடன் துணியும் சுருங்கி விடும். நிழலில் துணிகளை உட்புறமாகத் திருப்பி காயப் போட வேண்டும். ஹேங்கர்களை உபயோகித்து காயப் போட்டால் துணிகளில் சுருக்கம் விழாமல் இருக்கும்.

6. பருத்தி ஆடைகளை இஸ்திரி செய்யும்போது சரியான வெப்ப நிலையில் இஸ்திரி செய்ய வேண்டும். சமிக்கி வேலைப்பாடுகள் இருந்தால் மிகுந்த கவனத்துடன் இஸ்திரி செய்ய வேண்டியது அவசியம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement