தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக சாக்லேட் தினம்!

07:43 AM Jul 07, 2024 IST | admin
Advertisement

சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரே திண்பண்டம் என்றால் அது சாக்லேட் தான். இன்று, ஜூலை 7, உலக சாக்லேட் கொண்டாடப்படுகிறது. சுமார் 460 ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு சாக்லெட் விதை அறிமுகமானது ஜூலை 7-ம் தேதி தான். அதனால் ஜூலை 7-ம் தேதியை உலக சாக்லெட் தினமாக கொண்டாடப்படுது.

Advertisement

சாக்லேட்டின் வரலாறு

Advertisement

கிமு 2000 ஆம் ஆண்டிலிருந்து, மத்திய அமெரிக்காவின் பண்டைய நாகரிகமான ஓல்மெக்ஸ் முதன்முதலில் கோகோ பீன்ஸ் பயிரிடத் தொடங்கியது. அப்போதிருந்து, சாக்லேட் உலகம் முழுவதும் ஒரு விருப்பமான திண்பண்டமாக இருந்து வருகிறது சாக்லேட் என்றால் நியாபகம் வருவது பிறந்தநாள் கொண்டாட்டமாக இருந்தாலும், அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய சாக்லேட்டின் சுவையும், அனுபவமும் மறக்க முடியாதவை. இந்த சாக்லேட் தினத்தை கொண்டாடும் நோக்கம் அனைவரின் குழந்தை பருவத்தையும், சாக்லேட்களின் இனிமையையும் போல் புத்துணர்ச்சியைப் பரவ என வைத்துக் கொள்ளலாம். சாக்லேட்களில் எத்தனை வகைகள்? வெள்ளை சாக்லேட், பால் கலந்த சாக்லேட், அடர் நிற சாக்லேட், இனிப்பு அடர் நிற சாக்லேட், மிதமான அடர் நிற சாக்லேட், கசப்பு-இனிப்பு சாக்லேட், இனிப்பில்லாத சாக்லேட் என ஒருவரின் மனநிலை, சுவை விருப்பத்திற்கேற்ப ஏழு கண்டங்களில் இருக்கும் மனிதர்களை கட்டிப்போடும் வித்தை கண்டது சாக்லெட்கள். இதனால் இதை "மேஜிக் பீன்" எனவும் அழைக்கிறார்.

செய்முறையும் நறுமணமும்:

கோகோ மரங்களில் இருந்து முதலில் பீன்ஸ்கள் பறிக்கப்டுகிறது. பின் அந்த பின்ஸில் இருக்கும் வெள்ளை நிறப் பகுதிகளை நீக்கி உலர வைக்கப்படுகிறது. இவ்வாறு நொதித்தல் முறையை செய்யும் போது சாக்லேட்கள் புளிப்பான சுவையைப் பெறுகின்றன. பின் உலர வைத்த பீன்ஸின் தொளிகளை நுனி முனியோடு உரித்து எடுக்கும்போது மனம் வாய்ந்த கோகோ பொருட்கள் கிடைக்கின்றன. பின் அவற்றை அரைத்து, வெண்ணெய் போன்ற பதத்தில் கொண்டு வந்து, அதில் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படுகிறது. இந்த பொருட்களின் அளவுகளைக் கொண்டு பல வகையான சாக்லேட்கள் உருவாக்கப்படுகின்றன.

மனங்களை இணைக்கும் சாக்லேட்:

நம் நாட்டில் இனிப்புகளுக்கும், இன்ப நிகழ்ச்சிக்கும் உறவு ஒன்று உள்ளது. குறிப்பாக, தமிழர்களின் உணவு பழக்கத்தில் மிட்டாய்கள், பலகாராங்களுக்கு தனி உணர்ச்சிகள் உண்டு. ஆனால், இந்த சாக்லேட்களுக்கு தனி இடம் உள்ளது. நெருக்கமானவர்களுக்கு பரிசாக கொடுக்க விரும்பும் பொருளாகவும் சாக்லேட்கள் இருக்கின்றன. அதிக நெருக்கமில்லாதவர்களிடமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அடையாளமாக இந்த சாக்லேட்கள் இருக்கின்றன.

சாக்லேட்டில் இத்தனை நன்மைகளா?

சாக்லேட் சாப்பிடுவதால் ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. இந்த மாற்றம் மனதையும், உடலையும் சுறுசுறுப்பு அடையச் செய்கிறது. மேலும், இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. சாக்லேட்கள் இருதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இவை உடலுக்குத் தேவையான கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைத் தருகிறது.உடலில் ரொமாண்டிக் உணர்வைத் தூண்டக்கூடிய தன்மை இந்த சாக்லேட்டுகளுக்கு உண்டு. எப்பொழுதும் உடல் நிலையைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் தன்மை இவைகளுக்கு உண்டு .சில ஆராய்ச்சிகள் மூலம் மூளையின் நினைவாற்றல் அறிவாற்றல் செயல்திறன் ஆகியவை சாக்லேட் உண்பதால் அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

அளவுக்கு மீறினால் என்ன நடக்கும்?

ஒரு வகையில் சாக்லேட்கள் சாப்பிடுவது பல பயன்களை தந்தாலும், அதிக அளவில் சாக்லேட்கள் சாப்பிடுவது தேவையற்ற கொழுப்புகளைச் சேர்க்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினசரி சாக்லேட்களை சாப்பிட்டுவதால் பற்களில் பூச்சிகள் அரிக்கும் அபாயம் உள்ளது, இவை டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. மேலும், இதில் வாசோஆக்டிவ் கனிமப்பொருள் இருப்பதால் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
annual celebrationchocolateWorld Chocolate Dayஉலக சாக்லேட் தினம்சாக்லேட்
Advertisement
Next Article