For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024: பாக்.கை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா!

06:08 PM Jul 14, 2024 IST | admin
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024  பாக் கை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா
Advertisement

ங்கிலாந்தில் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 தொடரின் முதல் சீசன் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் இடம் பெற்று விளையாடின.அதாவது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் சாம்பியன்ஸ் தொடர். இந்த தொடருக்கான இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், இர்பான் பதான், யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தனர்.

Advertisement

இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4 ஆவது இடங்களை பிடித்தன.இந்த நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்று முன் தினம் நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Advertisement

முடிவில் கடைசியில் யுவராஜ் சிங் மற்றும் இர்பான் பதான் இருவரும் இணைந்து இந்தியா சாம்பியன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்தியா சாம்பியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனை படைத்துள்ளது.இதற்கு முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியானது 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அரைசதம் அடித்த அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருது வென்றார். யூசுப் பதான் தொடர் நாயகன் விருது கைப்பற்றினார்.

Tags :
Advertisement