தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉உலக குருதிக் கொடையாளர் நாள்🩸

06:53 AM Jun 14, 2024 IST | admin
Advertisement

த்ததானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இன்று உலக ரத்த தானம் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது! தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

மனித குல வரலாற்றில் மருத்துவம் என்பது உதவியாக தொடங்கி அறிவியல் வளர்ச்சிக்கு பின்பு வணிகமயமாகிய பின்பும் ‘‘தானம்’’ என்ற மனிதநேய சொல்லை தாங்கி நிற்பது ரத்த தானம் மட்டுமே ஆகும். அதற்கு காரணம் மனித இரத்தம் ஒரு மகத்தானது என்ற அறநெறியும் உலகம் முழுமையும் இரத்தம் என்பது புனிதத்தின் அடையாளமாக பார்க்கப்படுவதுமே காரணம். ரத்தப் பிரிவுகளான A, B, O உள்ளிட்டவற்றை கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் பிறந்த நாளான இன்று, அவரை கெளரவப் படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பு 2004 ஆம் ஆண்டு முதல் ஜுன் 14 ஆம் தேதியை உலக ரத்த தானம் தினமாக கடைபிடிக்க அறிவித்தது.

Advertisement

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதே ஆகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி ரத்த தானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.

ரத்ததானம் செய்வதால் தானமாக பெறுபவர் மட்டுமல்லாமல், அதனை கொடுப்பவரும் பல்வேறு பயன்களை பெறலாம்.குறிப்பிட்ட சீரான இடைவெளியில் ரத்த தானம் செய்வதன் மூலம் உடலில் இயற்கையாக புது ரத்தம் பெருக்கெடுக்கும். இரத்தத்தில் உள்ளஹீமோகுளோபின் அளவும் சீரடையும். அத்துடன் இதய ஆரோக்கியத்தையும்மேம்படுத்துகிறது.

18 வயது முதல் 60 வயது வரை 45 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான ஆண்நபர் அனைவரும் மூன்று மாதத்திற்கு ஓருமுறை இரத்ததானம் செய்யலாம். பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம். நமது உடலில் உள்ள 5 லிட்டர் இரத்தத்தில் தானத்தின் போது 350 மில்லி அளவே எடுக்கப்படும் . எனவே இரத்த தானம் செய்ய யாருமேதேவையற்ற பயம்கொள்ள தேவையேயில்லை.

நாம் ஒரு முறை அளிக்கும் இரத்தத்தில் மூவரின் உயிரை காக்கும் வாய்ப்புகள்உண்டு. நாம் தானம் செய்யும் இரத்தத்தில் இரத்த வெள்ளையணுக்கள் ,சிவப்பணுக்கள், தட்டணுக்கள் என மூன்றாக பிரித்தெடுக்கப்படுகிறது.அவற்றை மூன்று நோயாளிகளுக்கு அளிப்பதன் மூலம் மூன்று உயிர்களை காக்கமுடியும்.

ரத்த சிவப்பணுக்கள் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில்பதப்படுத்தினால் 35 நாட்கள் வரை கெடாமல் பாதுக்கலாம்.ரத்த தட்டணுக்கள் 22 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 5 நாட்கள் பாதுகாக்கலாம்.ரத்த வெள்ளையணுக்கள் மைனஸ் 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் ஒரு ஆண்டு வரை பாதுகாக்கலாம். நம்மால் தானமாக அளிக்கப்படும் இரத்தங்கள் பல்வேறு கட்டபரிசோதனைகளுக்கு பிறகே நோயாளிகளுக்கு பாதுகாப்பாக செலுத்தப்படுகிறது.

நண்பர்களே! தண்ணீர் இறைக்க இறைக்க கிணறு மேலும் நன்கு நீர் ஊறுவதை போல்தான் நம் உடலில் உள்ள ரத்தமும். உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்.!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
BloodWBDDWorld Blood Donor Dayகுருதிக் கொடைரத்த தானம்
Advertisement
Next Article