தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம்!

10:09 AM Nov 26, 2024 IST | admin
Advertisement

ட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக சதைப் போடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கின்றனர். அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 3 மில்லியன் மக்கள் உளகளவில் இறக்கின்றனர். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

Advertisement

சராசரி உடலின் தின்ம அளவு (உயரத்துக்கு ஏற்ற எடை) 18.5 முதல் 22.9 வரை இருக்க வேண்டும். 25-லிருந்து 30 வரை இருந்தால் அதிக உடல் எடையுள்ளவராகவும், அதற்கு மேல் இருந்தால் உடல் பருமனுடையவராகவும் இருப்பர்.உடல் பருமனுடையோர் ரத்த அழுத்தம், சர்க்கரை, சுவாசக் கோளாறு, மூட்டுவலி போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுவர். உலக அளவில் 5 வயதுக்கு உட்பட்டோரில் சுமார் 4 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப் பட்டுள்ளனர். 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் உடல் பருமன் தினம் அனுசரித்த நிலையில் நவம்பர் 26ஆம் தேதியன்று பல நாடுகளில் சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் எச்சரித்து வருகின்றன .ஒபிசிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணம் என உடல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எல்லோருமே இன்றைக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.
.
உடல் பருமனுக்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு உடல் பருமன் இருக்குமானால், மரபுரீதியாக அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது. குடும்பத்தின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை, இதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தலாம். எண்ணெயில் வறுத்த, பொரித்த கொழுப்புள்ள உணவு வகைகளை அதிகமாக உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, உடலியக்கம் குறைவது, உடலுழைப்பு/உடற்பயிற்சி இல்லாதது, தைராய்டு பிரச்சினை போன்றவை உடல் பருமனைச் சீக்கிரமே அதிகரித்துவிடும்.சில மாத்திரைகளின் பக்கவிளைவாகவும் உடல் எடை அதிகரிக்கலாம். ஹார்மோன் மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள், பயோகிளிட்டசோன் எனும் நீரிழிவு நோய் மாத்திரை, இன்சுலின் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை அதிகம். காரணம், தற்போது பெண்களிடையே உடல் உழைப்பு பெரிதும் குறைந்துவிட்டது. உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் பணிகளில் ஈடுபடும் பெண்கள்தான் அதிகம். தவிர, வீட்டில் மிச்சமுள்ள உணவைத் தூக்கி போட மனமில்லாமல் சாப்பிடுவதும், தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே நொறுக்குத்தீனியை அளவு தெரியாமல் சாப்பிடுவதும், இந்தப் பிரச்சினையை உருவாக்கும். பல பெண்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு, ஹார்மோன்களின் அதீத விளைவால் உடல் பருமன் ஏற்படுவதுண்டு.

எடையைக் குறைக்க என்ன வழி?

உடல் பருமனுக்குக் காரணம் தெரிந்து, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. மேலும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையைக் குறைப்பது எளிது. ஓர் உணவியலாளர் உதவியுடன் உங்கள் BMI-க்குத் தகுந்த கலோரிகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப உணவைச் சாப்பிடுங்கள்.

உணவைப் பொறுத்தவரைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புள்ள உணவைத் தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை எரித்துவிட வேண்டும்.

உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Anti-ObesityObesityWorld Anti-Obesity Dayஉடல் பருமன்உடல் பருமன் எதிர்ப்பு தினம்!
Advertisement
Next Article