For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிமோன் பைல்ஸ் இன்னும் பல பதங்கங்கள் வெல்ல வாழ்த்துகள்!

12:50 PM Aug 02, 2024 IST | admin
சிமோன் பைல்ஸ் இன்னும் பல பதங்கங்கள் வெல்ல வாழ்த்துகள்
Advertisement

மெரிக்க ஜிம்னாஸ்டிக் வீரரான சிமோன் பைல்ஸ் (Simone Biles) மீண்டும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே மொத்தம் ஒன்பது பதங்கங்களை வைத்திருக்கிறார். அவருக்குக் குவிந்த வாழ்த்துகளுக்கு இணையாக அவர் தலை முடி கலைந்திருந்தது பற்றிய விமர்சனமும் எழுந்தது. தங்கம் வென்று தன் திறமையை நிரூபிக்கும் நேரத்திலும் ஒரு பெண், தலை முடி கலையாமல் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது ஒரு கூட்டம்.

Advertisement

ஒஹையோவில் பிறந்தவர் (1997) சிமோன். பெற்றோர் இருவருமே குடிநோயளிகள். போதைக்கு அடிமையானவர்கள். அப்பா பிரிந்து சென்றுவிட்டார். அம்மாவும் பார்த்துக் கொள்ள முடியாமல் போனது. சிமோனும் அவர் சகோதரர்கள் மூன்று பேரும் பாஸ்டர்கேர் கீழே வந்தார்கள். அம்மா வழித் தாத்தா ரான் பைல்ஸ் சிமோனையும் அவருடைய தங்கையும் தத்தெடுத்துக் கொண்டார். விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ரான். அவருடைய இரண்டாவது மனைவி, செவிலியர் பணியில் இருந்தார்.

Advertisement

பதின்ம வயதுப் பிள்ளைகள் ஜிம்னாஸ்டிக் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர், அதைப் போலவே செய்து காட்டினார். ஆறு வயதில் அவர் இவ்வளவு திறமையாகச் செய்வதைப் பார்த்த பயிற்சியாளர் வளர்ப்புப் தந்தைக்கு குறிப்பு ஒன்றை எழுதி அனுப்பினார். அப்போதிலிருந்து, சிமோனின் பயிற்சி தொடங்கியது. அவருக்கு இருந்த ஏடிஎச்டி சிக்கலைச் சமாளிக்க வளர்ப்பு அம்மா உதவினார். 14 வயதில் பள்ளிப் படிப்பைக் கைவிட்டு ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கே முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்தார் சிமோன். பல பதக்கங்களை வென்றார்.

கைப்பிடி அளவு அகலம் கொண்ட ஜிம்னாஸ்டிக் கட்டையில் இருந்து அவர் எழும்பிக் குதிக்கும் உயரம், சுற்றும் வேகம், கீழே தரையிறங்கும் லாவகம் அனைத்துமே மற்ற வீரர்களிடமிருந்து வேறுபட்டது. சிறப்பானது. தனித்த ஸ்டைல் ஒன்றை சிமோன் உருவாக்கினார் என்றால் மிகையில்லை. எழுத்தாளர்களுக்கு வரும் ரைட்டர்ஸ் பிளாக் போல, ஜிம்னாஸ்டிக் வீரர்கள் twisties வந்து அவதிப்படுவார்கள். உடலும் மனமும் இணைந்து செயல்பட விடாமல் செய்யும் மனத்தடை அது. சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வந்தார். மனச்சிக்கல்களை வெளிப்படையாகப் பேசி உதவி கோருங்கள் என்று பரப்புரையும் செய்கிறார்.

“I'm not the next Usain Bolt or Michael Phelps. I'm the first Simone Biles.” எனச் சொல்லும் சிமோன் பைல்ஸ் இன்னும் பல பதங்கங்கள் வெல்ல வாழ்த்துகள்.

கோகிலா பாபு

Tags :
Advertisement