தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கூரன் படத்தை விளம்பரப்படுத்த மேனகா காந்தி ஏன்?- எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!.

12:38 PM Dec 23, 2024 IST | admin
Advertisement

ரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.வருகிற டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை என்பதால் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமைகள் செயல்பாட்டாளரும் , த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனருமான மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டார்.

Advertisement

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது,"இந்தப் படத்தில் நடித்ததைத் தவிர எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இங்கே வந்திருக்கிற ராஜேஷ், பொன்ராம் இவர்களெல்லாம் எனக்குப் பிள்ளைகள் மாதிரி. இங்கே சேவியர் பிரிட்டோ வந்திருக்கிறார் .அவர் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர், மாதத்தின் 30 நாட்களில் 25 நாட்கள் உலகம் சுற்றிக் கொண்டிருப்பவர். அவர் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்.என் மனைவி ஒரு நல்ல விமர்சகர்.யாராவது படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் பார்ப்பார். படம் பிடித்திருந்தால் மறுமுறை பார்ப்பார். மிகவும் பிடித்திருந்தால் தான் மூன்றாவது முறை பார்ப்பார். அவர் இந்த கூரன் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறார். அதிலிருந்து இந்தப் படத்தின் வெற்றியை அறிய முடியும்.

Advertisement

நான் எண்பதுகளில் இருந்து படம் இயக்கி வருகிறேன். எனது ஒவ்வொரு படத்திலும் கதாநாயகன் இருக்கிறாரோ இல்லையோ ஒய்.ஜி.மகேந்திரன் இருப்பார்.இந்தப் படத்திலும் அவர் இருக்கிறார்.நான் இயக்கிய படத்தில் நடித்த அவர், என்னுடன் சேர்ந்து இதில் நடித்துள்ளார்.இங்கே வந்திருக்கிற விஜய் ஆண்டனியை நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கிறேன். நம்பிக்கையின் இன்னொரு உருவம் தான் விஜய் ஆண்டனி .எப்போதும் நேர் நிலையாகச் சிந்திப்பவர் எதிர்மறையாக ஒரு வார்த்தை கூட அவரிடம் வராது. எத்தனை முறை தடுக்கி விழுந்தாலும் எழுந்து நிற்பவர்.

இது ஒரு சிறிய பட்ஜெட் படம் தான் என்றாலும் இதை விளம்பரப்படுத்துவதற்கு இங்கே நமது சிறப்பு விருந்தினர் மேனகா காந்தி அவர்கள் வந்திருக்கிறார். அவர்களை ஏன் அழைத்திருக்கிறோம்? அவர் பெரிய பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலா? அவர் அரசியலில் செல்வாக்கு உள்ளவர் என்பதாலா? அவர் பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக இருந்தவர் என்பதாலா? அதையெல்லாம் தாண்டி மனிதநேயம் மிக்கவர், கருணை உள்ளம் கொண்டவர், மிகவும் எளிமையானவர்.அதனால் தான் அவரை அழைத்திருக்கிறோம். நான் பல தலைவர்களைச் சந்தித்து இருக்கிறேன். இவர் போல ஒருவரைப் பார்த்ததில்லை. இவரை டெல்லி சென்று அழைப்பது என்று முயற்சி செய்தபோது ஒரு முறை சந்திக்க நேரம் வாங்கித் தாருங்கள் என்று நண்பரிடம் கேட்டேன் .ஆனால் அவர் மெயில் அனுப்பினால் போதும் என்றார் .அப்படியே நாங்கள் மெயில் செய்தோம் .அதற்குப் பதில் வந்தது .இந்தப் படத்தின் கதை என்ன என்று படம் சொல்லும் கருத்து என்ன என்று கேள்விகள் இருந்தன.

நாயும் மனிதர்கள் போலத்தான். விலங்குகள் குழந்தைகள் மாதிரி. ஒரு நாயின் கவலை ,வருத்தம், போராட்டம் பற்றிக் கதை பேசுகிறது என்று நாங்கள் படத்தின் கதையைப் பற்றிக் கூறியவுடன் அவர் உடனே சம்மதித்தவுடன் 17 -18 தேதிகளில் வருகிறேன் என்றார். நேற்று 17ஆம் தேதி வந்தவர், படத்தைப் பார்த்தார். அடுத்த நாள் இன்று நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றி.விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் தனி காரில் வருவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவரது காரில் எங்களை ஏற்றிக் கொண்டு நான் ,எனது மனைவி, அவர் என்று அவரது காரில் வந்தோம். வரும்போது மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டே வந்தார். அந்த எளிமையைக் கண்டு நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை. இந்த இயக்குநர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. இப்போது உள்ள இளைஞர்கள் புதிதாகச் சிந்திக்கிறார்கள்.என்னை இந்தப் படத்தில் ஒரு நாயுடன் நடிக்க வைத்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு எனது தங்கை மகள் விமலா பிரிட்டோ மாமா நீங்களா நாயுடன் நடிதீர்கள்?உங்களுக்கு நாய் என்றாலே ஒத்துக் கொள்ளாதே எப்படி நடித்தீர்கள்? என்று ஆச்சரியப்பட்டார்.இந்தப் படம் நிச்சயமாக இதுவரை யாரும் பார்த்திருக்காத ஒரு படமாக இருக்கும்" என்றார்.

Tags :
KooranManeka GandhimoviepromoteSA Chandrasekaran
Advertisement
Next Article