புயல் போக்கைக் கணிக்கும் தகுதி இந்தியாவுக்கு ஏன் இல்லை?
பெஞ்சல் புயலை ஏன் நம்மால் சரியாக கணிக்கமுடியவில்லை?. வெப்பமண்டல பகுதியின் உள்ள வானிலையை கணிப்பது கடினம், ஆனால் நமக்கான காலநிலை மாதிரிகள் இல்லாமல் போவதும் மிகப்பெரிய பிரச்சனையாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மாதிரிகளை வைத்து நாம் கணிப்பதுதான் பெரிய சவால்.
மத்திய அரசுக்கு இப்போது எதை முக்கியமாக கருதுகிறது? கியான்வாபி மசூதியின் கீழ் சிவன் அல்லது ராமர் சிலை உள்ளதா என்று பார்ப்பதும், சம்பல் மசூதியை ஆய்வு செய்வதும்தான். கடந்த பலஆண்டுகளாக சொல்லிவருகிறோம், இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகளை உருவாக்க வேண்டுமென்று.
காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த சமயத்தில் 100 கோடியை ஒதுக்கி indiya institute of tropical meterology என்கிற நிறுவனத்தை அமைத்திருக்கவிட்டால் இந்த அளவிற்கு கூட நாம் ஆய்வுகளை செய்திருக்கமாட்டோம். ஆனால் கடந்த 11வருடங்களாக மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகளை உருவாக்க எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்தியாவின் வானிலையை தீர்மானிப்பதில் எல்-நினோ, ல-நினா, அமோக் rossby அலைகள் போன்ற பல்வேறு உலகளாவிய நிகழ்வுகள் இருந்தாலும், இந்த பகுதியில் உள்ள சில பிரத்தியேகமான நிகழ்வுகள் இந்தியாவின் வானிலையை தீர்மானிப்பதில் அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய பெருங்கடல் இருமுனை, இந்த பகுதியில் உள்ள பெருங்கடலின் வெப்பம் போன்றவை தாக்கத்தை ஏற்படுத்தும், எனவே தான் சொல்கிறோம் இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகள் தேவை என்று.
காலநிலை மாற்றம் கொண்டுவரக்கூடிய பேரிடர்கள் ஒருபக்கம் இன்னொருபக்கம் மத்திய அரசின் அறிவியல் தன்மையற்ற செயல்பாடு.