தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

UG படிக்க யார் போனாலும் இந்திய வங்கிகளில் கல்விக்கடன் வாங்காதீர்கள்!

05:53 PM Feb 08, 2025 IST | admin
Advertisement

கள் சிங்கப்பூர் NUS ல் படிக்க செல்கையில் 1 சிங்கப்பூர் டாலருக்கு 59₹ இருந்தது, இப்போது 66.160₹ இந்த மத்திய அரசினால் இந்தியர்களுக்கு பலன் துளியும் இல்லை, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே அதீத பயன், டாலர் விலை ஏற்றத்தால் தீ போல இங்கே விலைவாசி ஏறுகிறது,அங்கே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல்லாயிரம் ரூபாய் இந்திய மதிப்பில் சம்பளம் ஏறுகிறது என்பதே உண்மை.

Advertisement

இந்தியாவில் விலைவாசிக்கு தப்பிய எந்த பொருளும் இல்லை, மருந்துகள் கூட விதி விலக்கில்லை, உதாரணத்துக்கு ஸ்கூட்டர் டயர் எல்லாம் 500₹ ஏறிவிட்டது.வெளிநாட்டிற்கு பணம் அனுப்புபவர்கள் DBS வங்கி மூலம் மட்டுமே பணம் அனுப்பவும், எந்த தரகு எகஸ்சேஞ்ச் நிறுவனத்தையும் நாடாதீர்கள் 68₹ தந்தால் தான் ஒரு சிங்கப்பூர் வெள்ளி வாங்க முடியும. தவிர 18% ஜிஎஸ்டி வெறி.

Advertisement

உங்கள் மகள் மகன் என யார் UG படிக்கப் போனாலும் இந்திய வங்கிகளில் கல்விக்கடன் வாங்காதீர்கள், அவை மிகவும் விலை உயர்ந்தவை, சிங்கப்பூர் என்றால் DBS Bank ல் அங்கேயே சென்று கடன் வாங்க முடியும்,மாதம் 1 ஆம் தேதி கல்விக் கட்டணத்தை நேராக பல்கலையில் செலுத்துவர், என் மகள் அப்படி தான் கல்விக்கடன் வாங்கினார், 4.75% தான் வட்டி, வட்டி தவணை படிப்பு முடித்த பின் மூன்று மாதம் கழித்து துவங்கும்,குறைந்த தொகை 100 டாலர் கட்டலாம்,20 வருடம் கட்டலாம்,UG படிப்பவர்களுக்கு மட்டும் NUS ல் 50% கல்விக் கட்டணத்தை சிங்கப்பூர் அரசு ஏற்கிறது,மாதம் 1 ஆம் தேதி கல்விக் கட்டணத்தை நேராக பல்கலையில் செலுத்துவர், ஹாஸ்டல் உணவு இக்கல்வி கட்டணத்தில் சேராது, கல்விக் கட்டணம் = only tution fee.

சிங்கப்பூர் அரசுக்கு அதற்கு பிரதி உபகாரமாக மகள் படிப்பை முடித்த பின் மூன்று வருடம் அங்கே வேலை செய்து வரி கட்ட வேண்டும் என்ற உத்திரவாதம் தர வேண்டும், தந்தை அல்லது பாதுகாவலர் உத்திரவாத கையொப்பம் சென்னை வங்கி கிளையில் சென்று அதிகாரி முன் இட்டு,பாஸ்போர்ட் காப்பி தர வேண்டும்,இங்கே கல்விக்கடனுக்கு வங்கி மேலாளருக்கு லஞ்சம் தர வேண்டும், ப்ராசஸிங் ஃபீஸ் வேறு உண்டு,நிலம் வீடு அடமானம் வைக்க வேண்டும், ஜவாப்தாரி கையொப்பங்கள் நிறைய கேட்பர் , கடும் ஜிஎஸ்டி உண்டு, எக்ஸ்சேஞ்ச் விதிக்கும் தொகை எல்லாம் மிகவும் கடுமையானது, சுற்றுலா செல்பவர்கள் மாற்றி வாங்கவே லாயக்கற்றவை.இன்னும் அமெரிக்க டாலர் 100₹ எட்டினால் இங்கே உணவுப் பொருட்கள் துவங்கி விமான பயணச்சீட்டுகள் என அனைத்தும் பன்மடங்கு விலை ஏறும், சாண் ஏறாமலே முழம் சறுக்குவது தான் இந்த ஆட்சிகளின் லட்சணம்.

கீதப்ரியன் கார்த்திகேயன்

Tags :
dollerEducation LoanIndian banksRupeesstudy UG
Advertisement
Next Article