தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு கேப்டன் யார்?

05:14 PM Mar 13, 2024 IST | admin
Advertisement

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் வரும் 22-ம் தேதி முதல் நடைபெற உள்ளன. இத்தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். சிஎஸ்கே டீம் ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக முயற்சித்தது, ஆனால் அது சரியாக நடக்கவில்லை, எனவே தோனி அந்த ரோலை திரும்பப் பெற்றார்.

Advertisement

இந் நிலையில், போன வருடமே ஓய்வு பெறுவார் என எண்ணப்பட்ட மகேந்திரசிங் தோனி, இந்த ஆண்டும் விளையாடப் போறேனே என்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆனாலும் 42 வயதாகி விட்ட தோனிக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்காகவே ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் சற்று கவலை அடைந்தாலும், அவருக்கு பின் அணியை யார் வழிநடத்தப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

2025ஆம் ஆண்டுக்கு முன், ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளதால், தோனி 17ஆவது சீசனோடு ஓய்வுபெற்றால்தான், அது அணிக்கு நல்ல முடிவாக இருக்கும். இதனால், தோனி அடுத்த சீசனோடு ஓய்வுபெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இப்போதைக்கு சி எஸ் கே அணியில், கேப்டன் பதவிக்கான ரேஸில் இருப்பர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தான். இருவரும் சல பலத்தில் இருக்கிறார்கள். இதனால், யார் கேப்டனாக இருக்கப்போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதனிடம் கேட்டப் போது , ‘‘கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றி பேச வேண்டாம். அதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் விட்டுவிடுங்கள்” என்றார். எனவே ”தோனி அடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் யார் என்பதை முடிவு செய்து என்னிடம் தகவல் சொன்ன பிறகு அதை உங்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில், தோனி, ஓய்வு பெற்றப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் எனவும், நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்வாட் அணியை வழிநடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Chennai Super KingscskDhoniipl
Advertisement
Next Article