For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில்_கல்விக்கண்ணை_திறந்தவர்கள்_யார்?

08:23 PM Oct 16, 2023 IST | admin
தமிழகத்தில்_கல்விக்கண்ணை_திறந்தவர்கள்_யார்
Advertisement

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திமுக மகளிர் உரிமை மாநாட்டில் வரலாறு அறியாமல் பேசியது… தமிழக காங்கிரஸ் அன்றைய தலைவர்களின் பெயர்கள் கூடவா சோனியாவுக்கு தெரியல….தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர்கள் பற்றி தெரியாத பலர் தங்கள் மனம் போன போக்கில் கூறி திரிகிறார்கள்.

Advertisement

நாட்டின் விடுதலைக்கு பின் அன்றைய முதல் அமைச்சரான சென்னை ராஜதானி (பிரிமியர்) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மற்றும் அதற்குப் பிறகு முதல்வரான ராஜபாளையம் பி எஸ் குமாரசாமி ராஜா ஆகியோர் காலத்தில் தான் தமிழ்நாட்டின் (மற்றும் ஆந்திரம் உள்கொண்ட)கிராமப்புறம் அனைத்திலும் ஓடு வேய்ந்த காரை மற்றும் கல்கட்டடங்களும் அவற்றின் முற்றங்களில் காகித பூக்கள் என்று சொல்லக்கூடிய போகன்வில்லா பூச்செடிகளும் நடப்பட்டு மாணவர் சேர்க்கைக்காக கிராமப்புறங்களில் ஆசிரியர்களே சென்று சிறார்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் வைத்து நாட்டுப்பற்று பாடல்களை கீதமாகப் பாடி அன்றைய பள்ளிகளைத் தொடங்கினார்கள். அப்படியான ஒரு ஆதாரா பள்ளிக்கூடத்தில் படித்தவன்தான் நானும். ஏறக்குறைய அக்கால ரயில்வே ஸ்டேஷன்களும் ஓட்டுக் கல் கட்டடங்களோடு இம்மாதிரியாகத்தான் போகன் வில்லாச் செடிகளின் முகப்புகளோடு ரயில் நிலைய அதிகாரிகளுக்கான வீடுகளோடு அங்கே கட்டப்பட்டதை ஞாபக மூட்டுகிறேன்.

Advertisement

இப்படியான பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கான அமைப்பை திட்டமிட்டு ஒருங்கிணைப்பை காந்திய சிந்தனையாளரான ஜே சி குமரப்பா நண்பரான வெங்கடாசலபதியிடம் அந்த பொறுப்பு அன்று ஒப்படைக்கப்பட்டு மேற்சொன்ன இரு காங்கிரஸ் முதல்வர்கள் ஆட்சி காலத்தில் செவ்வனே நிறைவேற்றப்பட்டது.

ஏறக்குறைய வடக்கே ஆந்திர எல்லையில் இருந்து தெற்கின் கடை கோடியான கன்னியாகுமரி வடக்கு எல்லை வரை பரவலாக இந்த ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்றைய தமிழகம் அன்றைய சென்னை மாகானம் எல்லைகள் அமைந்த நவ1 இல 1956 வரை திறக்கப்பட்டு விட்டதை வரலாற்றில் இருந்து யாரும் மறைக்க முடியாது. அவற்றுக்கான எச்சங்கள் அடையாளங்கள் இன்னும் இருக்கின்றன.

அப்படியான கல்லுப்பட்டி வெங்கடாஜலபதி ஒரு அரசு அதிகாரியாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அதே கல்லுப்பட்டியில் இருந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தில் அதன் நிர்வாகியாகவும் இருந்தவாறே இப்பணிகளை தன் வாழ்நாள் உழைப்பாகவும் செய்து முடித்தார். விடுதலை கனவுகளும் நாட்டு முன்னேற்றமும் மக்களின் விழிப்புணர்வும் ஒன்று சேர்ந்திருந்த காலம் அது. மேலும் அது நாட்டுப்பற்றின் மீதான ஆதர்சமும் கடமையும் கொண்ட மனிதர்கள் வாழ்ந்திருந்த காலமும் இல்லையா.

குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததனால் அன்றைய முதலமைச்சர் ராஜாஜி அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்றாலும் கூட இந்த மாதிரியான புதிய பள்ளிகளை திறப்பதில் அவர் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார்.

அதற்குப் பிறகு பெருந்தலைவர் முதல்வர் காமராஜரும் இக்கல்வி திட்டத்தில் மிகுந்த முனைப்பு காட்டி அதை மதிய உணவு அளித்து இன்னும் விரிவு படுத்தினார். இதெல்லாம் அக்காலத்தில் நிகழ்ந்த அருமையான நினைவு கூறக்கூடிய முன்னோரின் செயல்கள் என்று நாம் உணர வேண்டும்.

இந்த காலத்தில் கல்வி அமைச்சர் எம்.பக்தவத்சலம், அதன் முன் அமைச்சர் சி. சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம், சத்தூர் எஸ். ராமசாமி நாயுடு, என காங்கிரஸ் முன்னோடிகள் அவர் பகுதி கிராமங்களில் பாடசாலைகள் அமைக்க பணிகள் ஆற்றினர். இவர்கள அனைவரும் காங்கிரஸ்காரர்கள்தான். இவர்கள் பெயர்கள் ஏன் சோனியா காந்தி நினைவுக்கு வர வில்லை. இல்லையெனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் தகவல்களை பெற்றாவது பேசி இருக்க வேண்டும். இந்த காங்கிரஸ் தலைவர்கள்/ முதல்வர்கள 1947-1967 வரை கல்வி வளர்ச்சி மற்றும் கிராம ஆதார பணிகளை ஆற்றினர். சோனியா காந்திக்கு இதை தெரியாது. அவருக்கு அன்றைய காங்கிரஸ் பற்றியும் தெரியாது.

கே௭ஸ்ஆர்போஸ்ட்

Tags :
Advertisement