For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அது சரி.. யார் இந்த சண்டாளர்கள்?

02:43 PM Jul 13, 2024 IST | admin
அது சரி   யார் இந்த சண்டாளர்கள்
Advertisement

மது அன்றாட வாழ்வில்... அர்த்தமோ, அதன் ஆழமோ தெரியாமல் உமிழும் பிரயோகங்களகவே இந்த சண்டாளப் பாவிகளும், படவா ராஸ்கல்ஸ்ஸும் புழக்கத்தில் உள்ளன. இதன் அர்த்தம் தெரிந்திருந்தால் சீமான் துவங்கி யாருமே இதனை உச்சரிக்க துணிந்திருக்க மாட்டார்கள் என்றே நம்புவோம்!

Advertisement

முன்னொரு சமயம் வடிவேலுகூட நகைச்சுவை என்ற பெயரில் இதனைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தார். இந்த கன்றாவியில் "படவா.....தொடவா..." என்று எதுகை மோனையோடு ஒரு சினிமா பாட்டு வேறு!

அது சரி.. யார் இந்த சண்டாளர்கள்?

Advertisement

வேதகாலத்திற்கு முந்தையது என்று கூறப்படும் மனுதர்மமே அன்றைய இந்தியத்தின் பூர்வீக கான்செட்புசன்! அது சண்டாளர்கள் யார் என்று தெளிவாக வகைப்படுத்துகிறது.

யார்,யாருடன் இணைந்தால், அவர்கள் என்ன ஜாதிப் பிரிவு என்று வரிசைப்படுத்தும் மனுதர்மம், அவர்களுக்குரிய தொழில்களையும் வரையறுக்கிறது!

ஜாதிகளை கடந்து மனம் ஒத்த ஆண்களையும் - பெண்களையும், அநுலோமர்கள் - பிரதிலோமர்கள் என்று வகைப்படுத்துகிறது. அதில் பிராமணப் பெண்ணிற்கும் - தாழ்த்தப்பட்ட ஆணுக்கும் பிறப்பவனே பிரிதிலோமாரான சண்டாளன்! அவனது பிறப்பே பாவம் ! அவனைத் தொட்டால் தாழ்த்தப்பட்டவனே கூட தீட்டுப்பட்டவன் ஆவான் !

இவர்கள் ஓரிடத்தில் வீடு கட்டி குடி இருக்க கூடாது! பிச்சை எடுத்தே வாழ வேண்டும்!

ஊருக்கு வெளியே வெட்ட வெளியில் தான் குடி இருக்க வேண்டும்!.

உலோக பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது!. உடைந்த மண்பாண்டங்களையே பயன் படுத்த வேண்டும்.!

இவர்கள் பயன்படுத்திய பாத்திரம் எவ்வளவு கழுவினாலும் தீட்டுப் போகாது!. துருப்பிடித்த இரும்பிலான அணிகலன்களை மட்டுமே இவர்கள் அணிய வேண்டும்!.

பிணத்தின் மீது விழும் ஆடைகளை மட்டுமே இவர்கள் பயன் படுத்த வேண்டும்.

விவசாயம் செய்யக்கூடாது. நாய்,கழுதை வளர்க்கலாம்.!

குறிப்பாக மாடு வளர்க்கக் கூடாது.! இரவில் நடமாடக் கூடாது.! பிணங்களை அகற்றுவது இவர்கள் கடமை.! மரண தண்டனை நிறைவேற்றிய பின் இறந்தவர்களின் உடைகளைக்கூட இவர்கள் எடுத்துக் கொள்ளும் உரிமை இந்த சண்டாளர்களுக்கு கிடையாது என்று தெளிவுபடுத்துகிறது மனுதர்மம்.

இதே போல குழந்தைகளை கொஞ்சும் போது "படவா.. ராஸ்கல்" என்று செல்லமாக சொல்வதுண்டு.

"படவா" என்பது நாவிதர்களில் ஒரு பிரிவினரைக் குறிக்கும். மேல் ஜாதிக்காரர்களின் வீடுகளுக்கே வந்து அவர்களது அந்தரங்க உறுப்பை மழித்து சுத்தம் செய்வது அவர்களது கடமையாக இருந்தது.!" ராஸ்கல்" என்பதன் பொருள், "தாயின் ஒழுக்கக் கேட்டால் முறைகேடாகப் பிறந்தவன்" என்பது!

. யாராவது இனி குழந்தைகளை "படவா.. ராஸ்கல்" என்று கொஞ்சினால், பெருமிதத்தில் மகிழாமல், மோதி மிதித்து விடவும் - அவர்கள் முகத்தில் உமிழ்ந்து விடவும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அவசியம் தானே?

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement