யார் பிரஜ்வல் ரேவண்ணா?நடந்தது என்ன?
மோடிக்கும், அமித் ஷாக்கும் தெரியும். இவரை வைத்து மிரட்டியே மதசார்பற்ற ஜனதா தளத்தை உள்ளே இழுத்திருப்பார்கள்.பெண்கள் முக்கியமல்ல, கூட்டணிதான் முக்கியம்..ஜெயிக்கனும். அவ்ளோதான்..
பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் தேவேவுடாவின் பேரன், முன்னாள் மினிஸ்டர் ரேவண்ணாவின் மகன், முன்னாள் சீஃப் மினிஸ்டர் அண்ணன் மகன்.கர்நாடகாவின் ஹாசன் JDS ல் எம்.பி. 33 வயது.
இந்த தேர்தலில் BJP மற்றும் JDS , மோடியின் சர்க்கார் வேட்பாளர் இவர்தான். 2 வாரங்களுக்கு முன்பு நரேந்திர மோடி அவருடன் மேடை பகிர்ந்தது மட்டுமல்லாமல், அவருக்காக பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டுக்கொண்டிருந்தார். இன்று அந்த கர்நாடக தலைவர் நாட்டை விட்டு தப்பித்து உள்ளார். அவர் செய்த கொடூர குற்றங்களை கேட்டது நமக்குதான் மன வேதனை, ஆனால் நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை அழித்த கேடு கெட்டவனுக்கு ஆதரவாக மோடி பிரச்சாரம் எனில் எல்லாம் ஓப்புமைதானே? அவர்களின் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளது. வைரல் வீடியோவில் அனைத்து வயது பெண்களையும் உடலளவில் துஷ்பிரயோகம் செய்வதை காணலாம்.
கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய பயங்கரமான கதைகள் உள்ளன.. வீட்டில் வேலை செய்யும் பெண்கள் முதல் கட்சி ஊழியர்கள், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், பெண் போலிஸ், உயர் வட்ட பெண்கள் என தேடி வரும் எவரையும் வலுக்கட்டாய பாலியல் வன்கொடுமைகளை செய்து அதை விடியோவில் பதிவு செய்துள்ளார்..மனசு நடுங்குகிறது அல்லவா.. நம் அக்கா, நம் அம்மா, பாட்டி, தங்கை என எவரையும் விடவில்லை. 68 வயது வேலை செய்யும்.பெண்மணி கெஞ்சுகிறார். தாத்தா, அப்பா எல்லாரையும் தெரியும். உன்க்கு நான் சோறுட்டியுள்ளேன், விட்டுடு என .விடவில்லை. விடியோவும்.அவர் வீட்டில் வேலை செய்பவர் ரேவண்ணாவுக்கும் இது உண்டு என தெரிவித்ததாக சொல்கிறார்கள். அப்பா, மகன் இருவரும் வீட்டில் வேலை செய்தவரை 🙁 மகன் விடியோ எடுக்கும் சைக்கோபாத்.
மோடிக்கு இந்த மிருகத்தை பற்றி எல்லாம் தெரியும். அதன் கொடூரம் பற்றி அவர்களுக்கு முழு அறிவு இருந்தது. டிசம்பர் 2023ல் பாஜக தலைவர் தேவராஜ கவுடா, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் சைக்கோத்தனம் மற்றும் பென் டிரைவ் பற்றி பாஜகவின் முதன்மை தலைமை மற்றும் மாநில தலைவர் ஆகியோருக்கு தெரிவித்தார். ஜனவரி 11, 2024 அன்று பிரஜ்வலுக்கு எதிராக பாஜக தலைமைக்கு எழுதிய தேவராஜ் கவுடா, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வண்புணர்வு மற்றும் ஹாசனின் பல்லாயிரக்கணக்கான பெண்களை சுரண்டல்கள் பற்றி எழுதியும் கூட அதை புறக்கணிக்கத்தது பாஜக.
சமீபத்தில் பிப்ரவரி-மார்ச் மாதத்தில், அமித்ஷா மைசூருக்கு சென்றபோது, முன்னாள் பாஜக எம்எல்ஏ ப்ரிதம் கவுடா, முன்னாள் எம்எல்ஏ ஏ.டி. ராமஸ்வாமி மற்றும் ஆர்வலர்களும் பிரஜ்வல் பற்றி கூறியுள்ளனர். அதற்கும் பதில் இல்லை..அவர்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மேட்டரே இல்லை. பிரஜ்வல் ரேவண்ணாவை ஹாசனில் வேட்பாளராக ஆக்கியதில் எல்லாருக்கும் பங்குண்டு.
கர்நாடக மகளிர் ஆணையம் தனது சுய அதிகாரத்தை வைத்து எஸ்பிக்கு நோட்டீஸ் வழங்கியது மேலும் இந்த கொடூர சம்பவத்தில் முதல்வரை SIT அமைக்க கேட்டது. கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் SIT விசாரணையை துவக்கி உள்ளது. இதற்கிடையில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரவும், விவகாரத்தில் விசாரணை நடத்தவும் SID தயாராகி வருகிறது. ஆனால் பெண் மானம், பெண் சக்தி, மகளீர் காப்போம் என்று பேசும் நரேந்திர மோடி இதற்கு பதில் சொல்ல முடியுமா?
இவர்களின் நாரி சக்தி நாறும் சக்தி
மனிதர்களா இவர்கள்?