தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கோலிவுட்டில் ஸ்ட்ரைக் நடப்பதும், நடக்காததும் நடிகர் சங்க கையிலே இருக்காம்!

09:49 AM Aug 02, 2024 IST | admin
Advertisement

லாஸ்ட் டூ டேஸ் பேக் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடோணும் உட்பட சில முக்கிய முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி சைன் இல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டது நடக்காத தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதற்கு உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி நடிகர் சங்கம் தங்களோட வன்மையான கண்டனத்தை தெரிவிச்சுது.

Advertisement

இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நேத்திக்கு நடந்துச்சு. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டாய்ங்க. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் தெரிவித்த கண்டனம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி சொன்னது,

“ஏற்கனவே நாங்கள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் உறுதியா இருக்கோமுங்க. மேலும், கூடிய செயற்குழு கூட்டத்திலும் அதைப் பற்றி விவாதிச்சோம். இதை நிறைவேற்றுவதில் தீர்க்கமாக இருக்கோம்.

ஆனா பாருங்க.. தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்துவதும், நிறுத்துவதும் நடிகர்கள்-ங்க கையிலேதான் உள்ளது. நாங்க நடிகர்களின் சம்பளத்தை குறைக்கச் சொல்லோலை. இந்தி, தெலுங்கு உட்பட மற்ற சினிமா துறையில் உள்ளது போல வியாபாரத்தில் ஷேரிங் முறைக்கு மாறோணும்-ன்னு தான் கோரிக்கை வைக்கிறோம். சினிமா துறையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் தான் நஷ்டத்தை மட்டுமே சந்திக்கிறோம்.

தீர்மானத்தில் நாங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்த தேதிக்கு முன் நடிகர் சங்கத்துடனான பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டினால் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடக்க சான்ஸ் இருக்கும். தனுஷ் தொடர்பாக எவ்வித புகாரும் தெரிவிக்கப்படவில்லை என நடிகர் சங்கம் புகார் அளித்திருந்த நிலையில், நடிகர் சங்கத்திடம் ஏற்கனவே தனுஷ் மீதான புகாரை தெரியப்படுத்தியுள்ளோம். தேவைப்படும் பட்சத்தில் எழுத்துப்பூர்வமான புகார் மனுவை வெளியிடுவோம்

மேலும் அஞ்சு நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒரு வருஷத்துக்கு முன்மாடியே முடிவெடுத்துப்புட்டோம். ஆனால், அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தோம். தற்போது அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லாத காரணத்தால், வேறு வழியில்லாமல் ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.  இந்த பிரச்னை தொடர்பாக நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்கு தயார்” அப்படீன்னார்

Tags :
DhanushkollywoodNadigar Sangamstrike
Advertisement
Next Article