தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தோல்விகள்ல இருந்து எப்போதான் பாடம் கத்துக்கப் போறோம்..?

06:44 PM Nov 20, 2023 IST | admin
Advertisement

நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க... ரெண்டாயிரம்தான் சொல்லுங்க... இந்த Final ல நாம தோத்தது மகா மட்டமான தோல்வி. இந்த 2023 வேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டிகள்ள தொடர் வெற்றிகள இந்தியா குவிச்சு என்ன பிரயோஜனம்..? ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே இந்தியா மேல சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகள்தான் இன்னைக்கு Final லயும் நாம தோத்ததுக்குக் காரணங்கள் - அதுல முக்கியமானது சொதப்பலான Fielding..!Fielding எப்படி செட் பண்ணனும்ங்குற பூகோள அறிவு நமக்கு இல்லைன்னாலும், ஒரு பாமரனுக்குக் கூட புரியற விஷயங்கள்தான் இதெல்லாம்...!

Advertisement

ஒரு பேட்ஸ்மேனுக்குத் தேவைப்படுற 'Finding the Gap' ங்கற ஒரு விஷயமே இந்தியாவுக்கு பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய பௌலர்களும் கொடுக்கல - அந்த Fielder களும் கொடுக்கல... போடப்பட்ட 300 பந்துகள்ள ஒரு டஜன் பந்துகள் மட்டுமே நம்ம பேட்ஸ்மனுக்கு சாதகமா இருந்தது. அதையும் ரெண்டு Fielder களுக்கு இடையில நம்மளால அடிக்க முடியல - இதுக்கும் நம்ம பேட்ஸ்மென் லேசுப் பட்டவங்க இல்ல...! அடிக்கப்பட்ட அந்த பவுண்டரிகளையும் தன்னைத் தாண்டி போக எந்த ஆஸ்திரேலிய Fielder ம் அனுமதிக்கல. அப்படியும் தாண்டிப்போன பந்துகள வடபழனி சிக்னல்லேருந்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வரை துரத்தி வந்து பௌண்டரி லைனை கிராஸ் பண்ணாம பாத்துக்கிட்டாங்க..!

Advertisement

ஆனா அவங்க பேட் செய்யும்போது எல்லா பந்துகளையும் கேப்ல அடிக்க முடிஞ்சது... நம்ம Fielder களுக்கு எப்போதும் போல உடம்பு வளையவே இல்லை... !இது பவுண்டரி போயிடும்னு கணக்கு பண்ணி மெதுவாகவே வந்துகிட்டு இருந்தாங்க. தாண்டிப் போன பந்துகளை பாய்ஞ்சும் பிடிக்கவே இல்ல. ரெண்டு பேருக்கு நடுவுல பந்து வந்தபோதும் ரெண்டு பேருமே மெதுவாதான் வந்தாங்க. ஆஸ்திரேலியர்களுடைய பாடி லாங்குவேஜ் நமக்கு சம்பந்தமே இல்லாம இருந்தது - எப்பவும் போலவே... ஒரு வேர்ல்டு கப் Final னா எத்தனை பவுண்டரி... எத்தனை சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருக்கணும்..? நாம ஒரு ரன்னுக்கு நாக்கு தள்ளினோம். அதிகபட்சம் ரெண்டு ரன்கள் கூட ஓடி எடுக்க முடியல... எடுக்க அவங்க விடல...!

ஒரு கட்டத்துல 50 ஓவர்களை நாம பூர்த்தி பண்ண முடியுமாங்கறதே மிகப் பெரிய கேள்வியா இருந்தது. வெளிநாட்டுல இந்த போட்டி நடந்திருந்தாலாவது அந்த வெதர் இவங்களுக்கு ஒத்துக்கல - சாப்பாடு ஒத்துக்கலன்னு எதையாவது சொல்லி தப்பிச்சி இருக்கலாம் - அதுக்கும் வாய்ப்பு இல்ல...! முக்கியமா அவங்க பேட்டிங் ஆரம்பிச்சப்ப நம்ம ஆளுங்ககிட்ட ஒரு Fire சுத்தமா இல்ல... "இந்த கப் எங்களுக்கு வேணும்... இதை விட்டுக் கொடுக்கவே மாட்டோம்..."ங்கிற வெறி எங்கேயுமே காணப்படலை...!முயற்சி பண்ணி தோற்கிற தோல்வியும் வெற்றிதான். ஆனா முயற்சியே பண்ணாம தோற்கிறதை என்னன்னு சொல்ல..?

Final க்கு வந்த இரு அணிகளும் சம பலத்தோடு இருக்க வேண்டாமா... போட்டி பொறி பறந்திருக்க வேண்டாமா..? கோலி செஞ்சுரி போட்டு இருந்தா... ஷமி ஒழுங்கா வீசியிருந்தா... ன்னு தனி நபர்கள் மேலயே குத்தம் சொல்றதை இன்னும் எவ்ளோ காலத்துக்கு நாம தொடர்ந்துகிட்டு இருக்கப் போறோம்..? தோல்விகள்ல இருந்து எப்போதான் பாடம் கத்துக்கப் போறோம்..? அட... இது விளையாட்டுதான்... அதை எப்பவுமே விளையாட்டாவே விளையாடிகிட்டு இருந்தா எப்புடி..?

வேணுஜி ராமமூர்த்தி

Tags :
2023 World CupAustraliafieldingfinalsIndiaLearnruns
Advertisement
Next Article