தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஈஷாவுக்கு ஏனிந்த மனநிலை? ஐகோர்ட் ஐயம்!

09:50 PM Sep 30, 2024 IST | admin
Advertisement

ந்திய அளவில் சர்ச்சைகளுக்கு பேர் போன 'ஜக்கி வாசுதேவ்' என்ற ஈஷா மைய நிறுவனர் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில் மற்றவர்களின் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் சன்னியாசி நிலை?'என ஐகோர்ட்டில் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர். எஸ் காமராஜ், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், “எனது இரண்டு மகள்களான கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்றவர்கள், அங்கேயே தங்கி விட்டனர்.இது குறித்து ஏற்கனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்த போது, ஐகோர்ட் , கோவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், இருவரும் சில நாட்கள் வெளி இடத்தில் தங்கி இருக்க வேண்டும்; அதன்பின் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் “எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக நானும் எனது மனைவியும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாக தெரிய வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தான் எந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி செய்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என இரண்டாவது மகள் மூலம் நிர்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி “எனது மகள்கள் ஈஷா யோகா மையத்திலிருந்து வெளிவந்தால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும். எனவே, இரு மகள்களை மீட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சம்பந்தப்பட்ட மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையின் பொழுது பெற்றோர்கள் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக மகள்கள் கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'நீங்களே முற்றும் துறந்த ஞானிகள் ஆன பின் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல் ஜக்கி வாசுதேவ் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இவர்களுக்கு ஏன் சன்னியாசி நிலை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை. ஆனால் பல சந்தேகங்கள் உள்ளது' என ஐயப்பாடை தெரிவித்தனர். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பி நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகள் குறித்த விவரங்களை வரும் நான்காம் தேதி காவல்துறை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

When Jaggi Vasudev’s daughter is married, why is he encouraging other women to be hermitesses, ask Madras HC judges

Advertisement
Next Article