தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வாட்ஸ் அப் - இனி இந்த 35 போன்களில் வேலை செய்யாதாம்!

09:44 AM Aug 13, 2024 IST | admin
Advertisement

ப்பிள், சாம்சங், மோட்டோரோலா, ஹவாய், எல்.ஜி, லெனோவா, சோனி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 35 மாடல் போன்களில் இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ்ஆப் செயல்படும் என்றும், அதன்பிறகு வேலை செய்யாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப், ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இயங்குதளத்தில் பயன்படுத்தப்படுகிறது. பழைய மாடல் போன்களில் வாட்ஸ்ஆப் தனது சேவைகளை படிப்படியாக நிறுத்தி வருகிறது.அந்த வகையில், 'ஐ.ஓ.எஸ்-12' அல்லது அதற்கு முந்தைய வெர்சன்கள் கொண்ட ஐபோன்கள் மற்றும் 'ஆன்ட்ராய்டு-5' அல்லது அதற்கு முந்தைய வெர்சன்கள் கொண்ட ஆன்ட்ராய்டு போன்களில் இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்பிறகு இந்த போன்களில் வாட்ஸ்ஆப் செயலி செயல்படாது. ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா, ஹவாய், எல்.ஜி, லெனோவா, சோனி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 35 மாடல் போன்களில் 2025 ஜனவரி முதல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாதாம்.

எந்த மாடலில் செயல்படாது?

ஆப்பிள் - iPhone 5, iPhone 6, iPhone 6S, iPhone 6S Plus, iPhone SE (1st Generation)

சாம்சங் - Galaxy Ace Plus, Galaxy Core, Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom

மோட்டோரோலா - Moto G, Moto X

ஹவாய் - Ascend P6 S, Ascend G525, Huawei C199, Huawei GX1s, Huawei Y625

எல்.ஜி - Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7

லெனோவா - Lenovo 46600, Lenovo A858T, Lenovo P70, Lenovo S890

சோனி - Xperia Z1, Xperia E3

இந்த போன் மாடல்களில் வாட்ஸ்ஆப் செயல்படாது எனவும், தொடர்ந்து வாட்ஸ்ஆப் சேவையை பெற, மேற்குறிப்பிட்ட லேட்டஸ்ட் வெர்சன்கள் கொண்ட போன்களில் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
35 phones!no longer workwhatsapp
Advertisement
Next Article