For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வாட்ஸ் ஆப் : இந்தியாவில் சுமார் 2 கோடி கணக்குகளை நீக்கியது!

05:10 PM May 03, 2024 IST | admin
வாட்ஸ் ஆப்   இந்தியாவில் சுமார் 2 கோடி கணக்குகளை நீக்கியது
Advertisement

2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 2 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.. இதேக்காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29 லட்சமும், பிப்ரவரி மாதத்தில் 45 லட்சமும், மார்ச் மாதத்தில் 47 லட்சமும் என ஒட்டுமொத்தமாக 1,22,31,306 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

தகவல் தொழில்துட்பத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் செயலியின் நம்பகத்தன்மை, தரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இது குறித்து வாட்ஸ்ஆப் தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஒருவேளை உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை திறந்ததும், அதில், உங்கள் கணக்கில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த அனுமதியில்லை என்ற தகவல் வரும். எங்களது விதிமுறைகளுக்கு மாறாக ஒரு வாட்ஸ்ஆப் கணக்கு செயல்பட்டால் அதனை நாங்கள் நீக்கிவிடுவோம்.

அதாவது ஸ்பேம், ஸ்கேம் போன்றவற்றில் ஈடுபடும் வாட்ஸ்ஆப் கணக்குகள் மூலம் பிற பயனர்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement