தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ரெட்மி நோட் 14 5ஜி -யில் என்ன ஸ்பெஷல்?

06:08 PM Dec 11, 2024 IST | admin
Advertisement

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD OLED ஸ்கிரீன் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 2100 நிட் பீக் பிரைட்னஸ் உள்ளது.

Advertisement

இந்த ஸ்மார்ட்போன் வெறும் 7.99mm அளவில் மிக மெல்லியதாக இருக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் கொண்டிருக்கும் புதிய ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சியோமி தெரிவித்துள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 20MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த ஸ்மார்ட்போன் IP54 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 5110 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் டைட்டன் பிளாக், மிஸ்டிக் வைட் மற்றும் ஃபேண்டம் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

Tags :
priceRedmi Note 14 5G?What's speci
Advertisement
Next Article