For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் அரசுகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? மோடி பேச்சு முழு விபரம்!

09:41 AM Feb 06, 2024 IST | admin
காங்கிரஸ் அரசுகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன  மோடி பேச்சு முழு விபரம்
Advertisement

‘இந்தியர்கள் சோம்பேறிகள், மெதுவாகவே வேலை செய்வார்கள், அவர்களுக்கு போதிய அறிவுகிடையாது’ என்று நேரு நினைத்தார். இந்திரா காந்தியும் அதே கருத்துகளை கொண்டிருந்தார். இந்திய மக்களின் திறமை, வேகத்தை காங்கிரஸ் தவறாக மதிப்பிட்டது. இதுவே காங்கிரஸ் அரசுகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றியப் போது குறிப்பிட்டார்.

Advertisement

டந்த ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 -ஆம் தேதி முதல் நடந்து வந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியது இதுதான்:

Advertisement

நாடாளுமன்றத்தில் அனைவரும் ஜனாதிபதிக்கு பின்னால் அணிவகுத்து வந்தோம் .10 ஆண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது அதையே ஜனாதிபதி உரை பிரதிபலிக்கிறது. “4 தூண்கள் பற்றி குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும். இளைஞர், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 சக்திகளை பற்றி பேசவுள்ளோம். மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம்.

ஆனால், சிறுபான்மையினர் குறித்து அவரது உரையில் குறிப்பிடப்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டுகிறார். உங்கள் பகுதியில் வசிக்கும் பெண்கள், இளைஞர், ஏழைகள், விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரை சிறுபான்மையினர் என பிளவுபடுத்துவது ஏன். இந்தநாட்டை இன்னும் எவ்வளவு காலம் துண்டாட முயற்சி செய்வீர்கள்.

எதிர்க்கட்சிகளில் திறமையான தலைவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் முன்னால் வருவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிட துணிவு இல்லை. பலர் தொகுதி மாறி போட்டியிட முயற்சிக்கின்றனர். சிலர் மக்களவைக்கு பதிலாக மாநிலங்களவைக்கு செல்ல விரும்புகின்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேமக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாறிவிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், வாரிசு அரசியல் பிரச்சினை காரணமாக கட்சியில் இருந்தே விலகிவிட்டார்.

காங்கிரசுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. இளம் எம்பிக்களின் குரலையும் காங்கிரஸ் முடங்குகிறது. இன்னும் எவ்வளவு காலம் தான் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள்,. எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்டநாள் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பர் என எனக்கு தெளிவாகிறது. அவர்களும் மேலே வரவில்லை, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சில நல்ல தலைவர்களையும் மேலே வரவிடவில்லை நாட்டை பிளவுப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்துங்கள். நாடாளுமன்றத்தில் இருக்கவே எதிர்க்கட்சிகள் தயங்குகின்றனர். எதிர்க்கட்சிகளின் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.

அரசியல் தலைவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த உழைப்பில் வளர்ச்சி அடைவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அமித் ஷா, ராஜ்நாத் சிங் குடும்பங்களுக்கு தனி கட்சி கிடையாது. வாரிசு அரசியல் என்பது நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது. அதனால், வாரிசு அரசியலை மட்டுமே எதிர்க்கிறோம். காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது. ஒரு மகனின்(ராகுல் காந்தி) நலனுக்காக மட்டுமே அந்த கட்சி கவலைப்படுகிறது. நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்கள் குறித்து காங்கிரஸுக்கு அக்கறை இல்லை. ஒரேபொருளை (ராகுல்) சந்தையில் மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்கிறார்கள். இதனால், அந்த கடை(காங்கிரஸ்) மூடப்படுகிறது.

நாங்கள் 3வது முறை ஆட்சிக்கு வரும்போது நாடு உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனும்போது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் விரைவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.எங்கள் ஆட்சிக் காலத்தின்ஒட்டுமொத்த சாதனைகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு 100 ஆண்டுகள் தேவைப்படும். கடந்த 10 ஆண்டுகள் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட காங்கிரஸுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அக்கட்சி அவ்வாறு செயல்படவில்லை.

எங்கள் ஆட்சிக் காலத்தின்ஒட்டுமொத்த சாதனைகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு 100 ஆண்டுகள் தேவைப்படும். ‘இந்தியர்கள் சோம்பேறிகள், மெதுவாகவே வேலை செய்வார்கள், அவர்களுக்கு போதிய அறிவுகிடையாது’ என்று நேரு நினைத்தார். இந்திரா காந்தியும் அதே கருத்துகளை கொண்டிருந்தார். இந்திய மக்களின் திறமை, வேகத்தை காங்கிரஸ் தவறாக மதிப்பிட்டது. இதுவே காங்கிரஸ் அரசுகளின் தோல்விக்கு முக்கிய காரணம் கடந்த 10 ஆண்டுகள் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட காங்கிரஸுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அக்கட்சி அவ்வாறு செயல்படவில்லை.இந்தியாவின் ஜிடிபி உலக பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வந்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். ஒன்றிய பாஜக அரசு பெரிய குறிக்கோள்களுடன் மிகவும் கடினமாக உழைக்கிறது. நாங்கள் பேசுவது எங்களின் சாதனையை அல்ல; நாட்டின் சாதனையை பற்றி பேசுகிறோம்.

பணப் பரிமாற்ற மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத் துறை 5,000 கோடி மதிப்பிலான சொத்துகளை மட்டுமே முடக்கியது. பாஜகஆட்சியில் ஒரு லட்சம் கோடிமதிப்பு சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது. நாட்டின்வளம், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

வந்தே பாரத், மேக் இன் இந்தியா, புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்டவை நாட்டின் சாதனைகள். 4.8 கோடி ஏழை மக்களுக்கு ஒன்றிய அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. நாங்கள் 70 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளை கொடுத்துள்ளோம். பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்ய 100 ஆண்டுகள் ஆகும். காங்கிரஸ் கொண்டுள்ள மனப்பான்மையால் நாட்டிற்கு பெரும் தீங்கு ஏற்படும். உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுவதை G20 மாநாடு மூலம் உலகத் தலைவர்கள் புரிந்து கொண்டனர்.

எங்களுக்கு தேசத்தின் திறமையின் மீது நம்பிக்கை உள்ளது மக்களின் சக்தியின் மீதும் நம்பிக்கை உள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து, நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தினோம். மகளிர் சக்தியை உணர்ந்து பாஜக திட்டங்களை வகுத்தது. தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றிபெறும் ~ என்று பேசினார்

Tags :
Advertisement