தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

EVM என்று எழுதப்பட வேண்டிய தேவை என்ன ?

06:57 AM Apr 20, 2024 IST | admin
Advertisement

வாக்குச் சாவடியில் வாக்குக்கருவி வைத்திருக்கப்படும் பகுதியில் ஒரு தடுப்பினை வைத்து அக்கருவிக்கான இடத்தை எழுதி அறிவித்திருக்கிறார்கள். என்னவென்று எழுதியுள்ளார்கள்? ‘EVM-ல் வாக்குப்பதிவு செய்யும் இடம்’ - என்று படத்தில் உள்ளது போல் எழுதி வைத்திருக்கிறார்கள். நான் வாக்களித்த சாவடியிலும் அவ்வாறே இருந்தது. தமிழ்நாடெங்கும் இதே முறையில் எழுதி வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

Advertisement

எண்ணிப் பாருங்கள். EVM என்றால் என்ன ? தமிழ்வழிக் கல்வியில் பயின்றோர்க்கு அல்லது ஆங்கிலம் அறியாதவர்க்கு அந்தப் பெயர் எப்படித் தெரியும் ? அந்தப் பெயர் EVM என்று ஏன் இருக்கவேண்டும் ?

Advertisement

தமிழ்நாட்டு மக்களில் ஒரு கூட்டத்தினர்தானே தமிழ்நாட்டு அரசு ஊழியர்களும் அலுவலர்களுமாக ஆகியிருக்கிறீர்கள் ?

ஏழை எளியோரும் எளிய நிலையிலான கல்வியறிவு உடையவர்களும் படிக்கத்தக்க வகையில் இருக்கவேண்டிய ஓரிடத்தில் EVM என்று எழுதப்பட வேண்டிய தேவை என்ன ? ‘வாக்குப் பதிவு மின்கருவி / மின்வாக்குப் பதிவுக்கருவி’ என்று எழுதினால் யார்க்குமே விளங்காதா ?

அவ்வாறு தமிழில்தானே எழுதப்பட்டிருக்கவேண்டும் ? ஏன் தமிழில் எழுதியிருக்கவில்லை ? ஆங்கிலத்தில், அதுவும் முன்னெழுத்துகளைச் சுருக்கித்தான் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயமென்ன ? அந்த முறை என்ன ? அல்லது இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கலாமே.

நாலு கோடி மொழிமக்கள் ஒரே நாளில் கூடுமிடத்தில் தமிழ்மொழியில் கருவிப் பெயர் இருக்காது, அப்படித்தானே ?

அரசு மட்டத்தில், தேர்தல் அலுவலர் மட்டத்தில் இப்படியெல்லாம் யாரும் எண்ணிப் பார்க்கமாட்டார்களா ?

கவிஞ.மகுடேஸ்வரன்

Tags :
EVMevm machineTamiltamilnadu
Advertisement
Next Article