For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகப் போகிறது?

01:29 PM Jan 03, 2024 IST | admin
கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகப் போகிறது
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மீதும் அதன் கட்டமைப்பின் மீதும் யாருக்கும் எரிச்சல் இருக்க முடியாது. மாறாக ரயில் போக்குவரத்து ஏதுவாக இல்லை என்று சொல்வதும், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று சொல்வது மட்டுமே இங்கு பெரும்பாலானோர் வைக்கும் குற்றச்சாட்டு. சர்வீஸ் சாலையில் பேருந்துகளை இயக்கி நெருக்கடியை ஏற்படுத்துவதாக, அப்பகுதி மக்கள் போரடியதையும் பார்க்க முடியும்.

Advertisement

பேருந்து நிலையம் கட்டப்படும்போது, கடந்த ஆண்டுக்குள் திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. செய்திகளில்கூட இன்னும் ஆறு மாதங்கள் ஆகலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவே தகவல்கள் வந்தன. பேருந்து நிலையத்தின் திறப்பு விழாவுக்கு முன்பாக, அரசின் திட்டங்களில் பிரதானமான ஒன்று, வண்டலூருக்கு அடுத்து கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையத்தை அமைப்பது, அங்கிருந்து எஸ்கலேட்டர் உதவியுடன் பேருந்து நிலையத்தை அடையும் வகையில் ஒரு நடை மேம்பாலத்தை அமைப்பது என்பதாக இருந்தது. மெட்ரோ ரயிலுக்கு தற்போது வாய்ப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் புறநகர் ரயில் நிலையத்தை அமைப்பதில் பெரிய சிக்கல் இருக்கப் போவதில்லை.

Advertisement

பெருங்களத்தூர் கடந்த பிறகு வண்டலூர் மேம்பாலம் கீழே இறங்கும் இடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இருப்பதால், அந்தப் பகுதியில் வாகனங்களுக்கான மேம்பாலம் கட்டுவது சவாலானது. ஜிஎஸ்டி சாலையில் இருந்து பேருந்து நிலையத்துக்குள் செல்வதற்கும், பேருந்து நிலையத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையை அடைவதற்கும் அருகருகே பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதான் நெரிசல் மிகுந்த நேரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக போகிறது.

சென்னையின் தேவையை கருத்தில் கொண்டு, திறக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் ஏற்படுத்திய போக்குவரத்து நெரிசல்கள் ஏராளம். அந்த நெரிசலை தவிர்ப்பதற்காகவே, வடபழனியிலும் கோயம்பேட்டிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதே நிலையை தற்போது கிளாம்பாக்கம் அடைந்திருக்கிறது. பேருந்து முன்பக்கம் வழியே உள்ளே சென்றால், பின்பக்கம் இருக்கும் சாலை வழியே வெளியே சென்று, ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரிக்கு அப்பால் மீண்டும் ஜிஎஸ்டி சாலையை அடையும் வகையில் ஒரு புறவழிச்சாலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வேறு ஒன்றாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அது அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றினாலோ பள்ளி கல்லூரியாக மாற்றினாலோ, மகிழ்ச்சி. ஷாப்பிங் மால் ஆகப்போகிறது என்றால், காசு இல்லாதவர்கள் ஊரை விட்டு வெளியே போக வேண்டியதுதான்.

ரகுராமன்

Tags :
Advertisement