தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

காஷ்மீரில் நடந்தென்ன?அமரனில் காட்டியதென்ன?

05:14 PM Nov 11, 2024 IST | admin
Advertisement

ங்கே நம் தமிழ்நாட்டில் சில நிமிஷம் மொபைல் டவர் வரலைன்னா... டவர் வந்த பிறகு... மக்கள் கடும் கோபத்தோடு இணைய சேவையை திட்டி ஒரு போஸ்ட் போடுகிறார்கள். மொபைல் சிக்னல் முழுசாய் கிடைக்காத வீடுகள் அல்லது வீட்டு மனைகள் இன்று விற்பனை ஆவதில்லை. மொபைல்.சிக்னல் கிடைக்காத வீடுகளுக்கு யாருமே வாடகைக்கு வருவதில்லை. இங்கே... நிலைமை இப்படி இருக்க... அங்கே காஷ்மீரில் நிலைமை எப்படி தெரியுமா..?!மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் அறிக்கைப்படி , காஷ்மீரில் இணையம் 2012 முதல் 2016 வரை குறைந்தது 31 முறை... பல நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக... 2016 ல், சுமார் 5 மாதங்களுக்கு தொடர்ச்சியாக இணைய சேவை தடை செய்யப்பட்டது.பிறகு... ஏப்ரல் 2017ல் மீண்டும் இணைய சேவை தடை அமலுக்கு வந்தது. அதன் பிறகு... அடுத்த 5 ஆண்டுகளில், ஒன்றிய அரசாங்கம்.... 28 முறை இணைய சிக்னல்களை நாட்கணக்கில் & மாதக் கணக்கில் முடக்கியது.இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 35A மற்றும் ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச்சட்டம், 2019 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தும் மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து... 5 ஆகஸ்ட் 2019 அன்று இணைய சேவை பூட்டுதல் தொடங்கியது .

Advertisement

2019 ஆகஸ்ட் 5 முதல், காஷ்மீரில் சென்று செய்தி வெளியிட எந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் இந்திய அரசாங்கத்திடம் இருந்து அனுமதி வழங்கப் படவில்லை.ஃப்ரீ பிரஸ் காஷ்மீர் , வாண்டே இதழ் மற்றும் லாஸ்ட் காஷ்மீர் ஹிஸ்டரி போன்ற காஷ்மீரின் பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் பேஸ்புக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இணைய செய்தி தளமான... காஷ்மீர் வாலாவின் முகநூல் கணக்கு நீக்கப்பட்டது. காஷ்மீர் வாலாவின் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) கணக்கு தணிக்கை செய்யப்பட்டது.5 ஆகஸ்ட் 2019 இல், சமூக ஊடகங்களில்... இந்திய ஒன்றிய அரசின் புதிய சட்டத்துக்கு எதிராக காஷ்மீர் மாநி... மன்னிக்கவும்... யூனியன் பிரதேச மக்கள் எதிர்ப்புக்கருத்து பதிந்து விடக்கூடாது என்று... இந்திய ஒன்றிய அரசு, காஷ்மீரின் அனைத்து பிராட்பேண்ட் மற்றும் மொபைல் இணைய சேவைகளையும் தடை செய்தது.

Advertisement

காஷ்மீர் மக்களின் தொடர் ஜனநாயக வழி திரள். போராட்டம் காரணமாக... ஜனவரி 2020 இல், சமூக ஊடகங்களுக்கான அணுகல் இல்லாமல் 2G இணைய சேவையை மட்டும் மீண்டும் அங்கே தொடங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இணையம் இல்லை, 2G கால் மட்டும் பேசிக்கொள்ளலாம். ஒரு மாதம் கழித்து... மோடி இந்தியாவுக்கு கூட்டி வந்து டிரம்ப் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மூலம் மிகப்பெரிய பொது நிகழ்ச்சிகள் நடத்தி.. அவர்களால் 2020 பிப்ரவரி-மார்ச் மாதங்களில்... கோவிட்-19 தொற்று பலருக்கு பரவி உறுதிசெய்யப்பட்டபோது... இந்தியா முழுவதும் இணையத்தில் கோவிட் தொற்று பாதுகாப்பு நடைமுறைகள் ஒன்றிய மற்றும் மாநில சுகாதார துறையால் பகிரப்பட்டன. அப்போதும்... காஷ்மீரில் மட்டும்...ஒன்றிய அரசு 4ஜி இணையத் தடையை தொடர்ந்து அமல்படுத்தி, காஷ்மீர் யூனியன் பிரதேச மக்கள் எவரும்... கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் உயிர் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் பற்றிய முக்கியமான எந்தவொரு தகவல்களையும் பெறுவதைத் தடுத்து விட்டனர்.

J&K யூனியன் பகுதியில்... கோவிட்-19 இறப்புக்கான ஆபத்து காரணியாக 4G தடையை மருத்துவ நிறுவனங்கள் பல விவரித்து விமர்சித்துள்ளன. ஏனெனில், ஐநாவின்... உலக சுகாதார அமைப்பு - WHO ன், கோவிட் டெஸ்ட் மற்றும் அதன் எதிர் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள்... காஷ்மீர் யூனியன் பிராந்தியத்தில் வாழும் பொதுமக்கள் எவராலும் அணுக முடியாதவையாக இருந்தன. அதே நேரத்தில்... ஏனைய இந்தியாவில் உள்ள அனைத்து... கொலை கொள்ளை பாலியல் வன்முறை செய்த கிரிமினல் குற்றவாளிகளும் கூட சிறைகளில் அவற்றை அணுக முடிந்தது. கோவிட்டு எதிரான உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.சர்வதேச மனிதாபிமான அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், கோவிட் தொற்றுநோய்களின் நெருக்கடியான சூழ்நிலையில் 4G இணையத்தை.. காஷ்மீரில் மீட்டெடுக்குமாறு, இந்திய ஒன்றிய அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது.

3G மற்றும் 4G இணையம் கிடைக்காததாலும், கோவிட் பற்றி ஆன்லைனில் குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைக்காததாலும், கொரோனா வைரஸைச் சமாளிக்க காஷ்மீர் யூனியன் பிரதேச மருத்துவர்களால் கூட முடியவில்லை. 2020 ஏப்ரல் - மே இல், இந்திய உச்சத் தீர்ப்பு மன்றம், 4G இணையச் சேவைகளுக்கான தடையை எதிர்த்து காஷ்மீரிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை விசாரித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச ஒன்றிய அரசின் கவர்னர் நிர்வாகம், "இணையத்தை அணுகும் உரிமை என்பது ஒன்றும்... குடிமக்களின் அடிப்படை உரிமை அல்ல" என்று கூறி அந்த மனுவை எதிர்த்தது .

11 மே 2020 அன்று, 4G இணைய சேவைகளை மீட்டெடுப்பதற்கான கோரிக்கையை மறுத்து, ஒன்றிய அரசின் எதிர்ப்பை சரியென ஏற்று... இந்த இணைய சேவை கேட்கும் காஷ்மீரிகளின் மனுக்களை உச்சத் தீர்ப்பு மன்றம் தள்ளுபடி செய்தது. எவ்வாறாயினும், மனது கேட்காமல்... உள்ளுக்குள் தைக்க... இந்த பிரச்சனையை விசாரிக்க மூத்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவை உச்ச தீர்ப்பு மன்றம் அமைத்தது. அந்த குழுவில்... இணைய தணிக்கையை திணிப்பதில் முக்கிய பங்காற்றிக் கொண்ட அதிகாரிகள் இடம்பெற்று இருந்தது முரண்நகை ஆக இருந்தது..!

அங்கே இவ்வளவு நடந்துள்ளது...

ஆனால்... மேஜர் முகுந்த்... பாவம்... இந்த இணைய சேவை இல்லாத காஷ்மீரில் எப்படி எல்லாம் அவர் கஷ்டப்பட்டு வாழ்ந்து இருந்திருப்பார் என்ற உண்மையை காட்டாமல்...அமரன் படத்தில்... ஜாலியாக வீடியோ காலில் மனைவி குழந்தையோடும்... ஹீரோவும் மற்ற படையினரும் தத்தம் குடும்பத்தோடும்... பகல் இரவு பாராமல் நீண்ட நேரம்.. விடிய விடியக்கூட... 4G நெட்வொர்க்கில் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருப்பதைப் போல... பொய்யாக திரிபுப் பேத்தல் காட்சிப்படுத்தப்பட்டு... தமிழ்நாட்டு முதலமைச்சரையும் பெரும்பான்மை மக்களையும் மூளைச்சலவை செய்து... ஒரு ராணுவ வீரரின் உயிர் தியாகத்தை பலநூறு கோடிக்கணக்கான ரூபாய் வசூலாக மாற்றி... அள்ளி அள்ளி தங்கள் வங்கி அக்கவுண்ட்டை ரொப்பிக்கொண்டு உள்ளனர்.

முகமது ஆசிக்

Tags :
4G .AmaranbanbroadbandInternetkasmireMobileviedio call
Advertisement
Next Article