For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

த.வெ.க.கொடி,பாடலை வெளியிட்டு நடிகர் விஜய் பேசியது என்ன?

05:14 PM Aug 22, 2024 IST | admin
த வெ க கொடி பாடலை வெளியிட்டு நடிகர் விஜய் பேசியது என்ன
Advertisement

“தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வெறும் கட்சிக் கொடியாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக நான் பார்க்கிறேன்” என்று நடிகர் விஜய் உணர்வுபூர்வமாகப் பேசினார். பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அதோடு கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டார்.

Advertisement

கொடியை அறிமுகம் செய்த பின் நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாவது:

Advertisement

“என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்.

புயலுக்குப் பின் அமைதி மாதிரி…

புயலுக்குப் பின் அமைதி மாதிரி, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது. நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் அந்த நாளில், நம்முடைய கொள்கைகள், செயல்திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரைக்கும் சந்தோசமா, மாஸா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்.

இது வெறும் கட்சிக் கொடி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன். நான் சொல்லாமலேயே இந்த கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்”. இவ்வாறு விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருக்கிறார். இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று இந்த கொடிக்கம்பத்தில் மஞ்சள் நிறத்துடன் தனது உருவம் பொறிக்கப்பட்ட கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.

2 போர் யானை வாகை மலர்

2 போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கொடியை அறிமுகம் செய்த பின்னர், விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

வேற்றுமைகளைக் கலைந்த…

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்”. இவ்வாறு அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அடிசினல் ரிப்போர்ட்

‘‘மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது’’ - கொடிப் பாடல்

முழுக்க 3டி கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் பாடலின் தொடக்கத்தில் யானைகள் மீது அமர்ந்தபடி சிலர் மக்களை துன்புறுத்துகின்றனர். கையில் காப்புடன் குதிரையில் வரும் விஜய் போன்ற ஒருவர், தனது இரு யானைகளின் மூலம் அந்த கொடுங்கோலர்களை வீழ்த்துகிறார்.

“தமிழன் கொடி பறக்குது

தலைவன் யுகம் பிறக்குது

மூணெழுத்து மந்திரத்தை

மீண்டும் ஒலிக்குது” –

என்ற வரிகள் வருகின்றன.

அதனைத் தொடர்ந்து

“சிகரம் கிடைச்ச பின்னும்

எறங்கி வந்து சேவ செஞ்சு,

நீங்க கொடுத்த எல்லாத்துக்கும்

நன்றி காட்டும் காலம் இது”

என்ற வரிகள் வருகிறது. இதன் மூலம் சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவதை குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. பாடலின் நடுவே கொடியை ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்துவர் ஏந்தி நிற்பதைப் போல ஒரு இடம் வருகிறது. இதன் மூலம் மதநல்லிணக்கமே தனது பாதை என்பதை தெரிவித்துள்ளார்.

“அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி”, “தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது, தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது” என்றும் பாடலில் வரிகள் வருகிறது.

Tags :
Advertisement