For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமோ?

06:29 PM Sep 10, 2024 IST | admin
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமோ
Advertisement

ப்பிள் நிறுவனத்திற்கு, வருடா வருடம் முக்கிய மாதம் இந்த செப்டம்பர். ஒவ்வொரு வருடமும் இந்த  புதிய வகை ஐ போன் மற்றும் அதன் பொருட்களை அறிமுகப்படுத்தும். அப்படி அறிமுகப்படுத்திய ஒரு புதிய ஈவென்ட் தான் "Apple Glowtime Event 2024 " . இந்த வருடம் ஆப்பிள் ஐ போன் 16 , ஆப்பிள் வாட்ச் 10 , மெருகூட்டப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 , ஏர் போட் 4 மற்றும் ஐ ஓ எஸ் 18 தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த பட்ட பொருட்கள்.

Advertisement

Apple 16 - முதலில் ஆப்பிள் 16 பற்றி பார்ப்போம். - வழக்கத்தை விட அதாவது போன மாடலான ஆப்பிள் 15 அல்லது இது வரை இல்லாத அளவுக்கு சற்று பெரிய ஸ்கிரீன் மற்றும் கொஞ்சம் ஸ்லிம் ஆகியிருக்கும் இந்த ஆப்பிள் 16 " iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, and iPhone 16 Pro Max மாடல்களை வெளியிட்டு இருக்கிறது. புது வண்ணங்கள் மற்றும் குயிக் கேப்ச்சர் என்னும் புது பட்டனை வலது கீழ் பக்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் சட்டென்று கேமரா மட்டும் வீடியோ எடுக்க முடியும். மேலும் இந்த பட்டனை அழுத்தி நீங்கள் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்ய இயலும். போனை சைலண்ட் மோடுக்கு மாற்ற இயலும். இவை தவிர்த்த, கூடுதல் அம்சங்களும் இருக்கிறது.

Advertisement

இதன் கேமராவில் ல் 48 எம்பி பியூஷன் மெயின் கேமரா இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் 24 மில்லி மீட்டர் போக்கல் லென்த், 48 மில்லி மீட்டர் இரண்டு மடங்கு டெலி போட்டோ, ஆன்ட்டி ரெஃலெக்டிவ் லென்ஸ் கோட்டிங், , இரண்டாம் தலைமுறை சென்சார் ஷிப்ட் ஐஓஎஸ். 100 சதவீத பிக்சல் போக்கஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் 48 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மூலம் ஹைபிரிட் ஃபோக்கஸ், பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.மேலும் இந்த போன் மூலம் 4கே 120 பிரேம் பெர் செகண்ட் வீடியோக்களையும் எடுக்க முடியும். யூடியூபர்கள் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸர்களுக்கு இந்த போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ஆடியோ மிக்ஸ் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் நீருக்கடியிலும் ஐபோன் 16 ப்ரோ மூலம் துல்லியமாக வீடியோ எடுக்க முடியும்.

அனைத்து மாடல்களிலும் செயற்கை நுண்ணறிவு என்னும் Apple Intelligence பொருத்தி வருகிறது.இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸ் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் கூட, உடனடியாக பயனாளர்கள் இதனை பயன்படுத்த இயலாது. ஆப்பிள் இண்டலிஜென்ஸை சில மாதங்கள் கழித்தே இந்த போன்களில் அப்டேட்டாக வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. முதலில் இதன் 'பீட்டா' அம்சம் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, மற்ற நாடுகளுக்கு கொஞ்சம்கொஞ்சமாக விரிவுபடுத்தப்படுமாம்.

இந்த ஆப்பிள் போன்கள் "A18 Pro chipset built on a 3-nanometre process " பிராசர்ஸ்களை கொண்டது. மெமரி 128 முதல் 1 டிபி வரை உள்ளது. செப்டம்பர் 13 முதல் 20 க்குள் ஆப்பிள் 16 மக்களுக்கு கிடைக்கும் என்கிறது ஆப்பிள் நிறுவனம். விலை 79,900 முதல் 119,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இந்தியாவில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும். இந்தியாவில் ஐபோன் 16 போனின் விலை ரூ. 79,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ளஸ் போனின் விலை ரூ. 89,900 ஆகும். ஐபோன் 16 ப்ரோ போனின் விலை ரூ. 1,19,900 ஆகவும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனின் விலை ரூ. 1,44,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Apple Watch 10 & Apple Ultra 2 - ஆப்பிள் 10 வகை கடிகாரங்களில் பல மாற்றங்கள். இந்த கடிகாரங்கள் வழக்கம் போல ஸ்டீல் இல்லாமல் டைட்டானியம் பாடி, OLED டிஸ்ப்லே இதன் மூலம் 40 % அதிக ஒளியும் 10 % எடை குறைந்து சற்று இளைத்து காணப்படுகிறது.உடற்பயிற்சியின் ஈடுபடும் போது பயன்படுத்திக் கொள்ள ஏற்ற கடிகாரமாக இது அறியப்படுகிறது. ஆரோக்கியம் குறித்த தரவுகளையும் பயனாளிகள் அறிந்து கொள்ள இயலும். செப்டமர் 20-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த கடிகாரத்தின் விலை ரூ. 46,900 ஆகும். இந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தின் இதயமான பிராஸசர் " S10 chipset with a 4-core Neural Engine " வகை என்பதால் ஸ்லீப்பிங் அப்னியா டிராக்கர் வசதி உள்ளது. இது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 க்கும் பொருந்தும்.

Airpod 4 / Airpod Pro 2 - ஏர்போட் 4 இந்த தடவை பல புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த ஏர் போட் வகைகளுக்கு H2 chip பொறுத்தியுள்ளனர். ஏர் போட் ப்ரோ 2 வகை வெறும் ப்ளூ டூத்தக்க இல்லாமல் காது கேளாதவர்களுக்கு உபயோகப்படுத்த படும் ஹியரிங் எயிட்டாகவும் உபயோகப்படுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்.

Tags :
Advertisement