தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மத்திய அரசின் போக்குக்கு இப்படியும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாமே!

06:57 PM Feb 23, 2025 IST | admin
Advertisement

காலையில் நடைபயிற்சி செய்யும்போது மனதுக்குள் ஒரே உழப்பல்... !ஒன்றிய அரசுக்கு என்று தனி மக்கள் தொகை கிடையாது. ஆனால் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகளிலும் வருவாயிலும் பெரும்பகுதி ஒன்றிய அரசுக்கே போய்ச் சேருகிறது. மாநில அரசுக்குச் சேர வேண்டிய பங்கினை தர மறுக்கிறது. ஆளும் கட்சி, தன்னை வெற்றி பெறச் செய்த மாநிலங்களுக்கு மட்டும் அள்ளித் தருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறது. அதிலும் ஜிஎஸ்டி வந்தபிறகு மாநிலங்களின் அதிகாரம் மிகவும் குறைந்து விட்டது.

Advertisement

நம் மாநிலத்திலிருந்து ஒன்றிய அரசுக்குப் போகும் நிதியை எவ்வாறு குறைக்கலாம்? வரிகொடா இயக்கம் எல்லாம் சாத்தியமில்லை. ஜிஎஸ்டியிலிருந்து வெளியேறுகிறோம்... இனி மாநிலத்தில் எங்கள் வரிதான் என்று சொல்லலாமா...? முடியாது. என்ன செய்யலாம்....?இதுதான் அந்த உழப்பல்.பேஸ்புக் திறந்ததும் நண்பர் ஒருவர் எழுதிய ஆங்கிலப் பதிவு கண்ணில் பட்டது. அவர் தன் பெயரை டேக் செய்வதை விரும்ப மாட்டார் என்பதால், பதிவை தமிழாக்கம் செய்து தருகிறேன்.


o 0 o
Advertisement

நீங்கள் இந்தியாவை நேசிக்கிறீர்கள். நீங்கள் இந்தியராக இருப்பதில் பெருமைப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு தமிழர். தமிழ்ப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பற்றியும் நீங்கள் பெருமைப்படுகிறீர்கள்.ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு (அ) கல்வி போன்ற விஷயங்களுக்கு தமிழ் நாட்டுக்கு வழக்கமான நிதிப் பகிர்வு செய்யாதது, (ஆ) பேரிடர்களை கையாள நிதியை வழங்க மறுப்பது போன்ற செயல்கள் நியாயமற்றவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இவ்வாறு செய்வது பாஜகவுக்கு வசதியாக இருக்கலாம், ஏனெனில் அது தமிழ் நாட்டின் பால் அக்கறை காட்டுவதன் மூலம் அதற்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக, இந்தி பெல்ட்களில் நிதியை அள்ளி இறைத்தால் வாக்குகளை தாராளமாகப் பெறலாம். ஆனால் இது உங்களைப் போன்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துகிறது.

நீங்கள் என்ன செய்யலாம்? ஒன்றிய அரசுக்கான வருவாயில் உங்கள் பங்களிப்பைக் குறைத்து, தமிழ் நாடு அரசுக்கான வருவாயில் உங்கள் பங்களிப்பை அதிகரிக்கலாம். அதையும் சட்டப்பூர்வமான முறையில். எப்படி?இயன்றவரை இவற்றை செய்து பார்க்கலாம் :

1. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்க்கவும் (சுங்க வரி ஒன்றிய அரசுக்குச் செல்கிறது). இந்தியாவுக்கு வெளியே தயாரிக்கப்படும் பொருட்களையும் தவிர்க்கவும். அதற்கு பதிலாக தமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தவும் (SGST தமிழ்நாடு அரசுக்குச் செல்கிறது). உதாரணம்: ஹூண்டாய், ரெனால்ட் நிசான், BMW, டொயோட்டா அல்லது மாருதியை விட BYD!

2. OTT-யைத் தவிர்க்கவும் (GST ஒன்றிய அரசுக்குச் செல்கிறது). திரையரங்குகளுக்குச் செல்லவும். (கேளிக்கை வரி தமிழ்நாடு அரசுக்குச் செல்கிறது).

3. இந்தியாவில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைவிட தமிழ்நாட்டிற்குள் சுற்றுலா செல்லுங்கள்.

4. 80G இன் கீழ் வரி விலக்குக்காக தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கவும். PM Cares-க்கு நன்கொடை அளிப்பதைத் தவிர்க்கவும்.

5. வருமான வரி செலுத்தும் போது சலுகை விலக்குகளை அதிகபட்சமாகப் பயன்படுத்தவும். இது ஒன்றிய அரசுக்கான வருவாயைக் குறைக்கிறது/தாமதப்படுத்துகிறது.

6. பிற பயன்கள் கிடைக்கும் என்றாலும், தமிழ்நாட்டிற்கு வெளியே அல்லாமல், தமிழ்நாட்டில் வணிகங்களை நிறுவவும். SGST மற்றும் தொழில்முறை வரி தமிழ்நாடு அரசுக்குச் சேரும்.

7. தமிழ் நாடு சார்ந்த சேவை வழங்குநர்களை (ஆலோசகர்கள், நிபுணர்கள் போன்றவை) தேர்வு செய்யுங்கள். SGST தமிழ்நாடு அரசுக்குச் சேரும். IGST ஒன்றிய அரசுக்குச் சேரும்.

8. தமிழ் நாடு மாநில மேம்பாட்டு கடன் பத்திரங்களை வாங்கவும். SDL-கள் கூட்டாட்சி வரிக்கு உட்பட்டவைதான். ஆனால் நிதிகள் மத்திய மானியங்களுக்கான தேவையைக் குறைக்கின்றன.

9. வட்டி கிடைக்க்க்கூடிய ஒன்றி அரசின் பத்திரங்களை விட தமிழ் நாட்டின் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள். முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் தமிழ் நாடு அரசுக்குச் சேரும். தமிழ்நாட்டின் நகராட்சிகளுக்கு சொத்து வரி சேரும்.

10. அதிக கலால் வரி கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்கவும். எடுத்துக்காட்டு: பெட்ரோல் வாகனத்தை விட மின்சார வாகனத்தை நீங்கள் விரும்பினால், தமிழ்நாடு அரசுக்கு நன்மைகள்; ஒன்றிய அரசுக்கு வருவாய் இழப்பு.

11. நீங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே ஒரு நிறுவனத்தை வைத்திருந்தால், தமிழ்நாடு செயல்பாடுகளை துணை நிறுவனமாக அமைக்கவும். தமிழ்நாட்டிற்குள் ஒரு நிறுவனத்தை வைத்திருந்தால், தமிழ்நாடு அல்லாத செயல்பாடுகளை கிளைகளாக அமைக்கவும். கார்ப்பரேட் வரியில் தமிழ்நாடு பங்கை அதிகரிக்கும்.

இவை ஒன்றிய அரசை திவாலாக்கி விடாது. இருப்பினும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.மகாத்மா காந்திக்கும் இதே போன்ற சவால் இருந்தது; அவர் அரசுக்கு நிதி போய்ச் சேர்வதைத் தடுக்க சுதேசி இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார். அது பிரிட்டிஷ் அரசை திவால் ஆக்கிவிடவில்லைதான். ஆனாலும், பிரிட்டிஷ் அரசை பாதித்தது.

ஷாஜஹான்

Tags :
businesscentralfundIndianmoneystateநிதிபாஜக
Advertisement
Next Article