தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மத்திய அரசு தொடங்கிய 'வேவ்ஸ்' ஓடிடி தளம்!

06:05 PM Dec 03, 2024 IST | admin
Advertisement

குக்கிராமங்கள் தொடங்கி பெருநகரம்  வரை அனைத்து தரப்பு மக்களும் தரமான ஓடிடி சேவையை பெறும் வகையில் “பாரத்நெட்” நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. கோவா தலைநகர் பனாஜியில் துவங்கிய 55வது சர்வதேச திரைப்பட விழாவில் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சவந்த் இந்த ஓடிடி சேவையைத் தொடங்கி வைத்தார்.

Advertisement

தமிழ் இந்தி, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உட்பட 12 மொழிகளில் 10க்கும் மேற்பட்ட பல வகையான நிகழ்ச்சிகளை வேவ்ஸ் வழங்க உள்ளது. இதில் தகவல் தொழில்நுட்ப பொழுதுபோக்கு, விளையாட்டு, வானொலி சேவை, நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 65க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்களின் சேவைகளும் உள்ளடங்கும்.

Advertisement

தொழில்நுட்ப உதவியுடன் இணையவழி வணிகத்திற்கு (‘‘ஆன்லைன் ஷாப்பிங்’’) வேவ்ஸ் ஓடிடி பாலமாக அமைய உள்ளது. தூர்தர்ஷன், ஆகாஷ்வாணி மற்றும் எண்ணற்ற தனியார் தொலைக்காட்சி, செய்தி, பொழுதுபோக்கு, இசை, தெய்வீகம் தொடர்பான சேனல்களை ‘‘வேவ்ஸ்’’ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.

Tags :
'Waves''வேவ்ஸ்'Central governmentLaunchedOTT Platformஓடிடி தளம்!மத்திய அரசு
Advertisement
Next Article