For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பெங்களூரில் அரங்கேறிய தண்ணீர்.. தண்ணீர்!

08:12 PM Mar 06, 2024 IST | admin
பெங்களூரில் அரங்கேறிய தண்ணீர்   தண்ணீர்
Advertisement

பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் செவ்வாய்கிழமையன்று 24 மணி நேரத்துக்கு குடிநீர் சப்ளை நிறுத்தத்தை அறிவித்தது. அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், கணக்கிடப்படாத நீர் முறைப்படுத்தல், மொத்த ஓட்ட மீட்டர்களை நிறுவவும் இந்த சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக விளக்கம் தரப்பட்டது. 2023 இல் மிகக் குறைந்த அளவுக்கு பருவமழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. பெங்களூருக்கு தண்ணீர் தரும் காவிரி ஆற்றுப்படுகை நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்துடனான தண்ணீர் பிரச்னையால், நகரின் ஒரு நீர் ஆதாரம் முடங்கியுள்ளது. 1.3 கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூரு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் லாரிகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. தண்ணீர் டேங்கர் டீலர்கள் பெங்களூரின் சில பகுதிகளில் வசிப்பவர்களிடம் 12,000 லிட்டர் டேங்கருக்கு 2,000 ரூபாய் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்பு இது 1,200 ரூபாய் ஆக இருந்தது என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்த நிலையில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நெருக்கடியாக மாறி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியார் டேங்கர் லாரிகளுக்கு போன் போட்டு அழைத்து விடுகின்றனர். ஆனால் சாமானிய மக்களோ காலி குடங்களுடன் தெரு தெருவாக அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண போர்வெல்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று ஆராய்ந்து லிஸ்ட் போட்டு, மாநகராட்சியில் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

Advertisement

பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் குடியிருப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் நிலத்தடி நீரின் அளவு குறைந்ததும் போதுமான மழை இல்லாததாலும் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து டேங்கர் லாரிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளதற்கு மழைப்பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பது, நிலத்தடி நீர் குறைதல், உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, தண்ணீர் டேங்கர் மாஃபியா எனப் பல காரணங்கள் தற்போதைய தண்ணீர்ப் பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன..

Advertisement

பெங்களூரின் நீர் விநியோகத்திற்கு பொறுப்பான அமைப்பான பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), காவிரி ஆற்றில் இருந்து அதிக தண்ணீரைப் பெறுகிறது. ஆனால் இந்த முறை குறைவான மழையால் காவிரியில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் இணைப்புகள் இல்லாத பகுதிகள் போர்வெல் அல்லது டேங்கர் தண்ணீரை நம்பியே உள்ளன. அவையும் வற்ற தொடங்கி உள்ளன.பெங்களூரில் காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீரைப் பெறும் அதே வேளையில், நகரம் இன்னும் ஒரு நாளைக்கு 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறைதான் தண்ணீர் பிரச்சனைக்கு பெரிய காரணம்.

இச்சூழலில் பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிலேயே தண்ணீர் இல்லாமல் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கே டேங்கர்கள் நிறுத்தப்பட்டு தண்ணீர் வசதி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement