யூட்யூப் சேனல் மூலம் சம்பாதிக்க ஆசையா? இதோ வழிகாட்டி!
உள்ளங்கை போனில் அடங்கி விட்ட உலகை ஒவ்வொருவரும் ஆளும் காலகட்டத்தில் யூடியூப் மிகவும் பிரபலமான சக்தி வாய்ந்த ஊடகமாகும். உலகம் முழுவதும் யூட்யூப் தளத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளை மக்கள் பார்த்து வருவதாக புள்ளிவிவரங்கள். இந்த, யூட்யூப்பில் படைப்பள்ளிகளாக விளங்கும் யூடியூபர்கள் நிமிடத்திற்கு 100 மணி நேர உள்ளடக்கத்தைப் (Contents) பதிவேற்றி வருகின்றனர். இந்த யூடியூபர்களில் பலர் லட்சாதிபதியாகவும், பிரபலங்களாகவும் மாறி வருகின்றனர்.
இந்நிலையில், யூட்யூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் (create a Youtube Channel and Online Marketing) குறித்த மூன்று நாள் பயிற்சியை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship development and innovation institute) அறிவித்துள்ளது. 09.01.2024 முதல் 11.01.2024வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சியில் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இப்பயிற்சியில் யூட்யூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி / கைபேசி எண்கள்.. 44-22252081/22252082, 8668102600/86681 00181 ஆகும்.