For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது!

08:56 PM Oct 17, 2023 IST | admin
வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது
Advertisement

ந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவதே `தாதாசாகேப் பால்கே விருது’. அது, இந்தாண்டு பழம்பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

85 வயதாகும் பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் நம்ம, தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டில் பிறந்தவர். டேன்ஸ் மற்றும் ஆக்டிங் மீது பேரார்வம் கொண்ட இவர் எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தின் மூலம் தன் முதல் சினிமா பயணத்தைத் தொடங்கியவர். இப்படம் 1956-ல் வெளியானது. ஆனால், தெலுங்கில் இவர் பணியாற்றிய அக்கினேனி நாகேஸ்வர ராவின் 'Rojulu Marayi' படம் இதற்கு முன்பே 1955-ம் ஆண்டில் வெளியாகிடுச்சு

Advertisement

நடனக் கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடிச்ச இவர் அபாலே குரு தத் இயக்கிய 'Pyaasa' எனும் பாலிவுட் படம் மூலம் கதாநாயகியாக வலம் வரத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்துப் புகழையும், விருதுகளையும் குவிச்சார்.

1971ல் வெளியான 'ரேஷ்மா அவுர் ஷெரா' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். மேலும், மத்திய அரசு இவருக்கு 'பத்மஸ்ரீ' மற்றும் 'பத்ம பூஷண்' விருதுகளையும் வழங்கிச் சிறப்பிச்சுது.

இந்தியில் 'Pyaasa', 'Kaagaz ke Phool', 'Chaudhavi Ka Chand', 'Saheb Biwi Aur Ghulam', 'Guide', 'Khamoshi' எனப் பல படங்களில் நடித்து இந்தியத் திரைத்துறை வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடிச்சார். தமிழில் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' படத்திலும் கமல்ஹாசனின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பை கமல்ஹாசனே பாராட்டினார்.

நடிகை வஹிதா ரஹ்மான் கடந்த 1974 ஆம் ஆண்டு ஷாஷி ரேகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்த நிலையில் காதல் உண்டாகி அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் பெங்களூரில் வாழ்ந்து வந்த வஹிதா ரஹ்மான் கடந்த 2000 ஆண்டு கணவரின் இறப்புக்கு பின்னர் அவர் மும்பை சென்று விட்டார். தற்போது அவர் மும்பையில் தான் இருந்து வருகிறார்.தமிழ் சினிமாவில் சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, சௌகார் ஜானகி போன்ற புகழ்பெற்ற ஹீரோயின்கள் போல், பாலிவுட்டின் பல்துறை கதாநாயகிகளில் ஒருவராக கருதப்படுகிறார் வஹீதா ரஹ்மான். கலைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

.

Tags :
Advertisement