For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விராட் கோலி புதிய சாதனைகள் - சச்சின் வாழ்த்து!

07:23 PM Nov 15, 2023 IST | admin
விராட் கோலி புதிய சாதனைகள்   சச்சின் வாழ்த்து
Advertisement

ரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49 சதம்) சாதனையை விராட் கோலி (50 சதம்) முறியடித்துள்ளார்.மேலும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். ஒரேநாளில் ஒரே போட்டியில் சச்சினின் இரண்டு சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார். இதுகுறித்து தன் எக்ஸ் தளத்தில் சச்சின் டெண்டுல்கர், “ இந்திய டிரஸ்ஸிங் அறையில்  உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கிண்டல் செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது. அதுவும் மிகப் பெரிய அரங்கில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எனது சொந்த மைதானத்தில் நடந்திருக்கிறது” என தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். குறிப்பாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 (29) ரன்கள் குவித்து அவுட்டான அவருக்கு பின் வந்த விராட் கோலி கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் தம்முடைய பங்கிற்கு மிகச் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரை சதம் கடந்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 79* (65) ரன்கள் அடித்திருந்த நிலையில் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.

Advertisement

அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாட நிலையில் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலியும் அரை சதம் கடந்து நியூசிலாந்து பவுலர்களுக்கு சவாலை கொடுத்தார். நேரம் செல்ல செல்ல நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தம்முடைய 50வது சதத்தை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் உலக சாதனையை உடைத்தார். இதற்கு முன் சச்சின் 452 இன்னிங்ஸில் 49 சதங்கள் அடித்திருந்த நிலையில் விராட் கோலி 259 இன்னிங்சிலேயே 50 ஓவர் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 700* ரன்கள் குவித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு வாழ்நாள் சாதனையை உடைத்தார்.

இதற்கு முன் 2003 உலகக்கோப்பையில் 673 ரன்கள் அடித்து சச்சின் படைத்த சாதனையை 2019இல் ரோஹித், வார்னர் போன்றவர்கள் நெருங்கியும் தொட முடியவில்லை. இருப்பினும் தற்போது அதையும் உடைத்துள்ள விராட் கோலி ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை (8*) 50க்கும் மேற்பட்ட ரன்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் (2003இல்) மற்றும் சாகிப் அல் ஹசன் (2019இல்) தலா 7 முறை 50+ ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

மேலும் உலக கோப்பையில் ஒரு தொடரில் 700 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்த அவர் தலைவணங்கிய போது பெவிலியனிலிருந்து சச்சின் மனதார கைதட்டி பாராட்டினார். இறுதியில் 9 பவுண்டர் 2 சிக்சருடன் 117 (113) ரன்கள் விளாசி விராட் கோலி இந்தியா 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவி ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்ரேயாச் ஐயர் சதமடித்து 105, கேஎல் ராகுல் 39* (20) ரன்கள் எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 397/4 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்நிலையில்தான் சச்சின் கோலிக்கு நெகிழ்வான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

Advertisement