For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

எஸ் டி ஆர்- அஸ்வத் மாரிமுத்து-ஏ ஜி எஸ் கூட்டணியில் புதிய படம்!

09:06 PM Oct 23, 2024 IST | admin
எஸ் டி ஆர்  அஸ்வத் மாரிமுத்து ஏ ஜி எஸ் கூட்டணியில் புதிய படம்
Advertisement

ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சிலம்பரசன் டி ஆர் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னணி நட்சத்திர நடிகரான 'அட்மான் ' சிலம்பரசன் டி. ஆர். கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனம், பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.

Advertisement

படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் போஸ்டர்- எஸ் டி ஆர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த Zen G தலைமுறை கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ் டி ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ளும் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது என்றும், ஒரு தரை லோக்கலான சிலம்பரசன் டி ஆர் ரசிகனின் ஃபேன்பாய் சம்பவமாய் இப்படம் இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தினை AGS Entertainment நிறுவனம் சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட திரைப்படமாக தயாரிக்கின்றனர். அர்ச்சனா கல்பாத்தி நிர்வாக தயாரிப்பு பணிகளை கையாள்கிறார்.
தற்போது, ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும், “டிராகன்” படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும், இப்படத்தின் டைட்டில், படத்தில் பங்குகொள்ளும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், சிலம்பரசன் டி. ஆர். நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சரித்திர திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement