தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கிராம சுகாதார செவிலியர் பணி & சவூதியில் செவிலியர் பணி-அப்ளை பண்ணுங்க!

01:03 PM Oct 20, 2023 IST | admin
Advertisement

மிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணிகளில் காலியாக உள்ள 2250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .

Advertisement

காலியிடங்கள்:

2,250

Advertisement

கல்வி தகுதி:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டுகளுக்கான துணை செவிலியர் (auxiliary nurse midwife) அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

இந்த காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, முற்பட்ட வகுப்பினருக்கு 42 வயது எனவும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் விலக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விகிதம்: சம்பள நிலை - 8 (ரூ .19,500 - 62,000)

தேர்வு முறை:

இந்த பதவிக்கு எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்காணல் தேர்வும் நடத்தப்பட மாட்டாது**.** நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி, சான்றிதழ்/ டிப்ளமா படிப்புக்கு 50% மதிப்பெண்ணும், 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு 30% மதிப்பெண்ணும், 10ம் வகுப்புத் தேர்ச்சிக்கு 20% மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தேர்வு முறை நடைபெறும்.

மேலும், கொரோனா தொற்று மேலாண்மையில் குறைந்தபட்சம் 100 நாட்கள் சிகிச்சை பணிகளை நிறைவு செய்த கிராம சுகாதார செவிலியர் செவிலியருக்கு இந்த பணியமர்த்துதலில் சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12 மாதங்கள் கொரோனா பணியை நிறைவு செய்தவர்களுக்கு 2 மதிப்பெண்ணும், 12 முதல் 18 மாதங்கள் நிறைவு செய்தவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், 18 முதல் 24 மாதங்கள் நிறைவு செய்தவர்களுக்கு 4 மதிப்பெண்ணும், 24 மாதங்களுக்கு மேலாக பணி நிறைவு செய்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணும் அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 ஆகும். பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் ரூ. 300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாகவே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2250 கிராம சுகாதார செவிலியர் பணி ஆள்சேர்க்கை அறிவிக்கையை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனைத்து அசல் கல்விச்சான்றுகள், முன்னுரிமைப் பதிவு தொடர்பான சான்று, சாதிச்சான்று, தமிழ்வழி பயின்றதற்கான சான்று, கொரோனா பணி நிறைவு செய்த சான்று, தடையின்மை சான்று, ஆகியவற்றுடன் எதிர்வரும் அக். 31ம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

அடிசினல் ரிப்போர்ட்

யல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனையில், செவிலியர் பணியிடம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவத்துடன், பி.எஸ்சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கான நேர்காணல் மும்பையில் நவ. 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் 95662 39685, 6379179200, 044-22505886, 044-22502267 மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம், விமானப் பயணச்சீட்டு இலவசமாக வழங்கப்படும்.

Tags :
healthjobsnurseNursing JobssaudiVillage
Advertisement
Next Article