For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்;பாமக மாநில துணைத் தலைவர் அன்புமணி போட்டி!

01:41 PM Jun 15, 2024 IST | admin
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக மாநில துணைத் தலைவர் அன்புமணி போட்டி
Advertisement

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.இதனிடையே திமுக சார்பில் இடைத்தேர்தலில் கட்சியின் மாநில விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் வேட்பாளராக போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இதனிடையே பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியினர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டிருந்தது. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார். விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை இன்று (சனிக்கிழமை) தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement